ஆயுள் முழுக்க ஆரோக்கியம் தரும்!
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த, 'திரிபலா' கலவையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்; தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு, உடம்பில் இருக்கும் நச்சுத் தன்மையைப் போக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆயுர்வேத மருத்துவத்தில் இது கூறப்பட்டு உள்ளது.கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உடலில் எந்தப் பிரச்னை என்றாலும், திரிபலா பொடியை சாப்பிடலாம். கடுக்காய் 50 கிராம், தான்றிக்காய் 100 கிராம், காய்ந்த நெல்லிக்காய் 200 கிராம் எடுத்து கடுக்காயை தட்டி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.தான்றிக்காய், நெல்லிக்காய் இரண்டையும் தனித் தனியாக, லேசாக வாட்டி விதைகளை அகற்றிய பின், ஆற வைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் பொடியை சேர்த்து, இரவு முழுதும் ஊற விட்டு, காலையில் அரை டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டில் தேன் கலந்து குடிக்கலாம்.தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட வேண்டும். 15 நாட்கள் இடைவெளி விட்டு, அடுத்த 48 நாட்கள்... அடுத்து, 15 நாட்கள் இடைவெளி... இப்படி மூன்று முறை குடிக்க, கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.- சித்த மருத்துவம்