உள்ளூர் செய்திகள்

பழங்களின் மகத்துவம்

நம் உடலுக்கு வலு சேர்ப்பதில், பழங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் விளையும் பழங்களை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.மாம்பழம்: முக்கனிகளில் ஒன்று மா. இதன் சுவையும், மணமும் அலாதி. இதில், மல்கோவா மாம்பழத்தின் சுவையே தனி. இப்பழத்தை உண்டால், தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை தீர்க்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் மயக்கத்தை தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். பல்வலி, ஈறுவலி போன்றவற்றை குணப்படுத்தும். நோய் தடுப்பு சக்தியை கூட்டும்; நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும். மாம்பழ சதையை அரைத்து, சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளை சேர்த்து அருந்த, கோடையில் ஏற்படும் வெப்பம், தோல் தொடர்பான தொல்லைகள் நீங்கும். அதிகம் எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்.அன்னாசி: அதிகளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால், இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கப் அன்னாசிப் பழத்தில், 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு, கார்போஹைட்ரேட் உள்ளது.பப்பாளி: பப்பாளியில், 59 ஜி.ஐ., கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. இதை, சர்க்கரை நோயாளிகள், தங்களின் சர்க்கரை அளவுக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும்.சீத்தா: வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில், சர்க்கரை அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில், போதியளவு கார்போஹைட்ரேட் உள்ளது.ஆப்பிள்: தினம் ஒரு ஆப்பிளை உண்டு வந்தால், மருத்துவரை பார்க்க தேவையில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !