உள்ளூர் செய்திகள்

மனித ரத்தத்தில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்!

மனித ரத்த, 'மாதிரி'களில் ௮௦ சதவீதம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. இது உடல் முழுதும் பரவி, உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து, ஆழ்கடல் வரையிலும், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து, சுற்றுச்சூழலை பெருமளவு மாசுபடுத்தி உள்ளது. உணவு, நீர், சுவாசிக்கும் காற்றின் வழியாக ஏற்கனவே நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உடலினுள் செல்கின்றன. நாங்கள் சோதித்த ரத்த மாதிரிகளில், 80 சதவீதம், குடிநீர் பாட்டில், 'பார்சல்' செய்ய பயன்படும் பைகளில் உள்ள பாலிஸ்டைரீன், மீதி 20 மாதிரிகளில், கேரி பேக்குகளில் உள்ள பாலிஎத்திலீன் என்ற நுண் துகள்கள் இருந்தன.ஒரு துகளின் அளவு, நுண்ணோக்கியில் பார்த்தால், 0.0007 மில்லி மைக்ரான் அளவு இருக்கும். பிளாஸ்டிக் காபி கப், பிளாஸ்டிக் முக கவசம், குழந்தைகள் பால் குடிக்கும் பீடிங் பாட்டில் போன்ற பொருட்களின் வழியாக, துகள்கள் ரத்தத்தில் கலக்கின்றன.இவை, ரத்த சிவப்பணுக்களில் படிந்து, உடல் முழுதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் அதன் திறனை குறைக்கிறது. கர்ப்பிணியின் தாய் - சேய் இணைப்புத் திசுவான பிளசென்டாவில் படிந்து, கருவின் இதயம், மூளை என்று செல்கிறது.குழந்தைகளை, 10 மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் துகள்கள் பாதிக்கின்றன என்று, மேற்கு ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தின் விர்ஜே பல்கழக சுற்றுச்சூழல் நச்சுத் தன்மையை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.- தி கார்டியன் பத்திரிகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !