உள்ளூர் செய்திகள்

மைக்ரேன் தலைவலி

தலைவலியிலேயே பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை தான், 'மைக்ரேன்' எனும் ஒற்றைத் தலைவலி. இது, நாள்பட்ட நரம்பு வியாதியே!'மைக்ரேன்' அல்லது ஒற்றைத் தலைவலி, பரம்பரையாக மற்றும் மரபணு குறைபாடுகளால் வரக்கூடும். மேலும் சுற்றுப்புறச் சுழல் காரணமாகவும், பாலியல் ஹார்மோன் மாற்றம் அடையும்போதும் வரலாம்.'மைக்ரேன்' தலைவலி, முன்னெச்சரிக்கைகள் அல்லது அவை இன்றி வரக்கூடும். திடீரென்று தோன்றி மறையும் பார்வை கோளாறுகள், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள், தோலில் தொடு உணர்ச்சி அதாவது ஊசி குத்துவது போல ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, 'மைக்ரேன்' வருவதற்கு முன்பாக நோயாளியால் உணரப்படும். 'மைக்ரேன்' வந்தால் இரண்டு மணி நேரம் முதல் ௭௨ மணி நேரம் வரை நீடிக்கும். ஒற்றைத் தலைவலியோடு, தலை வெடிப்பது போல், உணர்வு தோன்றும். உலக மக்கள் தொகையில், 15 சதவீதத்தினர் 'மைக்ரேனால்' பாதிக்கப்படுகின்றனர் என, ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 'மைக்ரேன்' வர முக்கிய காரணமே, பெருமூளை அதிர்ச்சிக்கு உள்ளாவதுதான். மூளையில் ஐந்தாவது நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்புநிலை மாறும் போது, 'மைக்ரேன்' வருகிறது. எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதால், மூளையில் மூன்றாவது கண் எனப்படும் ,'செரட்டோனின்' எனும் ஹார்மோன் அதிகமாக சுரந்து, மூளை அதிர்வுக்குள்ளாகி, 'மைக்ரேன்' வருகிறது. தானாகவே வந்து, தானாகவே குணமாகிவிடும் ஒரு வியாதி இது. அளவான ஓய்வு, தியானம், யோகா போன்றவை மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக்கி, இதுபோன்ற தலைவலிகளில் இருந்து, நிவாரணம் அளிக்க கூடியவை. -எஸ்.எம்.ராஜேந்திரன்,பொதுநலம் மற்றும் நீரிழிவு நிபுணர்.சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.எம்., நிறுவனம், திருச்சி. 9894118899.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்