கொழுப்பை குறைக்கும் திரிபலா
நெல்லிக் காய், கடுக்காய், தான்றிக் காய் மூன்றும் சேர்ந்த, திரிபலா பவுடரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் முன்னோர்கள் இதை பயன்படுத்தி உள்ளனர். தேவையில்லாத கொழுப்பைக் குறைப்பதோடு, பிறந்தது முதல் உடம்பில் தங்கிஇருக்கும் நச்சுத் தன்மையைப் போக்கக் கூடியது திரிபலா. கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்ல, உடலில் எந்தப் பிரச்னை என்றாலும், திரிபலா பவுடரை சாப்பிடலாம். தொடர்ந்து இதை சாப்பிட்டால், எந்தப் பிரச்னையும் வராது என்று கூறியுள்ளனர்.கடுக்காய், 50 கிராம், தான்றிக் காய், 100 கிராம், காய்ந்த நெல்லிக் காய், 200 கிராம், எடுத்து கடுக்காயை தட்டி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.தான்றி காய், நெல்லிக் காய் இரண்டையும் தனித் தனியாக, லேசாக வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின், ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் பவுடரை சேர்த்து, இரவு முழுதும் ஊற விட்டு, காலையில் அரை டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, வெது வெதுப்பான சூட்டில் தேன் கலந்து குடிக்கலாம்.தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட வேண்டும். 15 நாட்கள் இடைவெளிவிட்டு, அடுத்த 48 நாட்கள்...அடுத்து 15 நாட்கள் இடைவெளி...இப்படி, 3 முறை குடிக்க, கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ஆயுள் முழுக்கவே இப்படிச் செய்யலாம். எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்.