உள்ளூர் செய்திகள்

மாதுளையில் இருக்கும் உடல் நலன் ரகசியம்

பழங்களின் ராணி என போற்றப்படும் மாதுளை, ரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும், இரும்பு தாதும், சர்க்கரையும் மிகுந்த பழம். இதில், எளிதில் ஜீரணிக்கும் சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ளதால், பிணியாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயிற்றுப்புண், வயிற்று வலி, வயிற்று உளைச்சல், ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. இதை அருந்தினால், உடல் சூடு, மூலம், கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும். இதயம் வலிமை அடையும். ஹீமோகுளோபினை கூட்டும். வயிறு உப்புசம், காய்ச்சல், மலேரியா, அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது. மருத்துவ குணங்கள் * சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும். இதை சரி செய்யும் தன்மை, மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து, 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். * மாதுளம்பழத்தின் தோல் பகுதியை, நன்றாக காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை, சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன், உடலும் குளிர்ச்சியாகி விடும். * ஒரு டீஸ்பூன் மாதுளை சாறு, அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் பளபளப்பு கூடும். ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கும் தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும். * மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில், இந்த பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால், தோல் சுருக்கம் நீங்கும். * மாதுளம்பழத்தை உதிர்த்து பிரீசரில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்து, உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன், ஒரு பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன், இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். மாதுளை ஜூஸை தொடர்ந்து, 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்