கேள்வி - பதில்
* மண்ணீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?வினோத், செங்கல்பட்டுஉடம்பின் எடை அதிகரித்தல், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல், நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல், வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல், வாந்தி, உடல் பலவீனமடைதல், உடல் பாரமாக தெரிதல், கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்ட உடன் தூக்கம், எப்போதும் சோர்வு, இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல், மஞ்சள் காமாலை ஏற்படுதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல் ஆகியவை அறிகுறிகள்.மன அழுத்தம், கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோருக்கும் மண்ணீரல் பாதிப்படையும்.மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில், ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும். ரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்பால், மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவற்றாலும், மண்ணீரல் பாதிக்கப்படலாம்.ராதாகிருஷ்ணன், ஈரல் நோய் நிபுணர், திருச்சி* என் குழந்தைக்கு உடல் முழுக்க அரிப்பு இருக்கிறது. மலத் துவாரத்திலும் அரிப்பு உள்ளது. சிறுகுடற்புழுக்கள் இருக்கலாம் என்கின்றனர். அதுதான் காரணமா? அமலா, அயனாவரம், சென்னை.சிறுகுடற்புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை. அவற்றால், சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படும். உடலெங்கும் நமைச்சல் உண்டாகும். 'ஈசனோபிலியா' எனும் கிருமி, ரத்தத்தில் பரவும்.நன்கு வளர்ந்த புழுவினால், 'டைபாய்டு' போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முகவீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும். மேலும் அந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும். குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும். இது, மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அந்த புழுக்களை, முழுவதுமாக அழிப்பது தான் சிறந்த வழி.நிர்மலா, பொது மருத்துவர்.* இரும்பு சத்துள்ள உணவுகளை, பெண்கள் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏன்? ரோகிணி, கேளம்பாக்கம், சென்னை.மாதவிலக்கு சுழற்சியின்போது ஏற்படும் ரத்த இழப்பால், இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே, பருவம் அடைந்த அனைத்து பெண்களுக்கும், இரும்பு சத்து தேவை அதிகமாகிறது.சைவ உணவு உண்போரைவிட, அசைவ உணவு உண்போருக்கு மிக அதிக அளவில் இரும்பு சத்து கிடைக்கிறது. சைவ உணவில், அதிகளவு இரும்பு சத்து நிறைந்த கீரை வகைகளை, அன்றாடம் சேர்த்து கொள்வது நல்லது.சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்பு சத்தை விட, கர்ப்பிணிகளுக்கு, 50 சதவீதம் அதிகம் தேவைப்படும். சாதாரணமாக பெண்களுக்கு, தினசரி, 9 மி.கி., அளவு தேவை. ரோஷிணி, ஊட்டச்சத்து நிபுணர்