கேள்வி - பதில்
எனது அக்கா மகள், சாதாரண குழந்தைகளை போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கிறாள். மருத்துவர் 'மதியிறுக்கம்' (ஆட்டிசம்) என்கிறார். மதியிறுக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன?த.ரேஷ்மா, சென்னை.மதியிறுக்கம் ஏற்பட்ட குழந்தைகள், நம் கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள்; அவர்களை பார்த்து சிரிக்கும் போது பதிலுக்கு சிரிக்க மாட்டார்கள்; பொருட்களை சரியாக கையாள மாட்டார்கள்; கவனத்தை ஈர்க்க சத்தம் எழுப்ப மாட்டார்கள். கொஞ்சும் போது எந்தவித உணர்வையும் வெளிக்காட்ட மாட்டார்கள்; மழலையில் பேச மாட்டார்கள்; தங்களை தூக்கி கொள்ள கோரி உங்களிடம் வர மாட்டார்கள். மதியிறுக்க குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ளவர்கள் பற்றி அக்கறை இருக்காது அல்லது கவனம் இருக்காது. தங்களுக்கு புது நண்பர்களை உருவாக்கி கொள்ள மாட்டார்கள். தங்களை கொஞ்சுவதையும் விரும்ப மாட்டார்கள். அடிப்படையில் தனியாக மற்றவர்களிடம் இருந்து பிரிந்தே இருப்பார்கள்.க.நரேஷ், பொதுமருத்துவர், சென்னை.குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் 'டவல் பாத்' கொடுக்கச் சொல்கின்றனரே, ஏன்?ஜி.திவ்யா, சென்னைகாய்ச்சல் அதிகம் இருக்கும் போது, சாதாரண தண்ணீரில் 'டவல் பாத்' கொடுக்கும் போது உடல் சூடு குறையும். அதனால், காய்ச்சல் குறையும்.சா.தணிகைவேல், குழந்தைகள் நல மருத்துவர், சென்னைமழைக்காலத்தில் காய்ச்சல் அதிகமாக பரவக் காரணம் என்ன?எஸ். வெங்கட், திருவேற்காடுமழைக்காலத்தில் தண்ணீர் மூலம் நிறைய வைரஸ், பாக்டீரியாக்கள் பரவும். இதனால் நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், இருமல், வாந்தி பரவும். மேலும் மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். அதனாலும் நோய்கள் பரவும். நிறைய வகை காய்ச்சல்கள் பரவும். அதற்குத் தான் தண்ணீரை காய்ச்சி குடியுங்கள் என, அறிவுறுத்துகிறோம். ஆர். நித்யா, பொது மருத்துவர், சென்னை.கர்ப்ப காலத்தில், தைராய்டு பிரச்னைக்கு மருந்து எடுத்துக் கொள்ளலாமா? தி.பிரியா, மயிலாப்பூர்பொதுவாக, தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால், 'ஹைப்போ தைராய்டிசம்' என்றும், அதிகமாக சுரந்தால், 'ஹைப்பர் தைராய்டிசம்' என்றும் கூறுவர். இந்த இரண்டுமே பிரச்னைக்கு உரியது தான். கர்ப்பிணிகள், இந்த பிரச்னைக்கு, மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் மருந்து எடுத்துக் கொள்ளலாம். அதனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எஸ்.ஜாகீர் உசேன், தைராய்டு அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.