உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

என் மகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. எத்தனை முறை கூறினாலும், இப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்கிறாள். இப்பழக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?சு. கவிதா, சென்னைமது, புகை போல இதுவும் ஒரு பெரிய அடிக் ஷன் தான். நகம் கடிப்பதால், சளி, இருமல் மற்றும் சில சின்ன சின்ன கோளாறுகள் முதல் பெரிய உடல் நலக் கோளாறுகள் வரை உண்டாகலாம். இதற்கு காரணம், நகம் மற்றும் சருமத்தில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கிருமிகள். இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால், நாளடைவில், செப்டிக் இன்பெக் ஷன் உண்டாகி, மாரடைப்பும் ஏற்படும். நகங்கள் அழுகி, மிகுந்த வலி உண்டாகும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். நகம் கடிப்பவர்களின் விரல்களைப் பார்த்தால், கை விரல்கள் அசிங்கமாக இருக்கும். மேலும் விரல்களில் காயங்கள் இருப்பதோடு, சிவப்பாகவும் இருக்கும். இதனால், அதிக வலி ஏற்படும். நகங்களைக் கடிப்பதால், நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். எப்போதும், வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோலுரிய ஆரம்பித்து, அதனால், அவ்விடத்தில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகின்றனர். இப்படி விழுங்குவதால், அவை செரிமானமாகாமல், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, ஏதேனும் யோசிக்கும் போதோ அல்லது டென்ஷனாக இருக்கும் போதோ, அப்படியே கையை வாயில் வைப்பதால், கைகளிலுள்ள கிருமிகள் வயிற்றுக்குள் கடத்தப்பட்டு, வயிற்றில் பல பிரச்னைகளை சந்திக்கக்கூடும். தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமல் பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும். எனவே, நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், பலவித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.கே. மல்லிகாதொற்றுநோய் நிபுணர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !