நினைவில் கொள்ளுங்கள்!
உங்கள் உடற்பயிற்சிகள், உங்களுக்காகவே. உடற்பயிற்சி என்பது, ஏதோ மருத்துவர்களின் அல்லது மற்றவர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்வதாக இருக்கக் கூடாது. தன்னுடைய உடலைத் தான் பேணிக் காக்க முடியும் என்கிற முடிவோடு, ஒவ்வொருவரும் செயலில் காட்ட வேண்டும். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால் நன்று.தொடர் அலுவல்களில் ஈடுபட்டிருப்பவர்களும், மோசமான சோம்பறித் தன்மையும், தெளிவான மன உறுதியற்றவர்களும், உடற்பயிற்சிகளின் அருமை பற்றி அறியாதவர்களும், உடற்பயிற்சிகளைத் தவிர்க்கின்றனர்.அலுவலக நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பத் தகராறு, குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை, வழக்குகள், நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் பயணிக்கும் போது, வாகன நெரிசலில் அகப்படுதல் போன்றவை, மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. நம் வாழ்வில் அணுகுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம், வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம், மனிதனுக்கு ஏற்படக் கூடிய மன அழுத்தத்தை போக்கலாம்.சாப்பிட்டதும் ஜீரணமாகி சக்தி கிடைத்தால் தான், பலசாலியாக முடியும். அது போலவே உடல்நலம் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே, ஆரோக்கியமாக வாழ்ந்திட முடியாது. அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால் தான், நன்றாக வாழ முடியும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத் தேவையான அடிப்படைகள் உண்மை, உழைப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு.டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ்பொது நல மருத்துவர்.prabhuraj.arthanaree@gmail.com