உள்ளூர் செய்திகள்

அலங்கரித்த உணவுகளால் ஏற்படும் அபாயம்

தெருவோர உணவுக் கடைகள் அதிகரித்து விட்டன. ஒரு தோசை ஊற்றினால் கூட, அதில் சீஸ், வெண்ணெய், என்று என்னவெல்லாம் துருவி துாவ முடியுமோ, அத்தனையும் துாவுகின்றனர். உணவை உணவாகப் பார்க்காமல், அலங்கரித்து சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கிறோம். தங்களின் பாரம்பரிய உணவான பீட்சாவின் மேல், ஐரோப்பியர்கள் 'டாப்பிங்' செய்கின்றனர் என்பதற்காக, நாம் தோசை மேல் சம்பந்தமே இல்லாத பொருட்களை எல்லாம் போடுவது, வெறும் கலோரியை மட்டுமே தரும். விளைவு, உடல் பருமன்; அதை தொடர்ந்து ஏற்படும் பல நோய்கள்.இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை நடு இரவில், அதிகாலை 2:00, 3:00 மணிக்கெல்லாம் ஆர்டர் செய்வது, பிரியாணி சாப்பிடுவது உணர்வுபூர்வமானது என்று சொல்லி, அதிகாலை 4:00 மணிக்கு சாப்பிடுவது உடல் நலத்திற்கு எந்த அளவு கெடுதல் என்பதை தெரிந்தே செய்கிறோம்.நம் நாட்டில் இருப்பதை போல, இத்தனை விதங்களில் மைதா மாவில் தயாராகும் பரோட்டாவை உலகத்தில் வேறு எங்கும் பார்க்கவே முடியாது. துளியும் நார்ச்சத்து இல்லாத மைதாவை சாப்பிட்டால், அத்தனை எளிதில் கழிவுகள் வெளியேறாது. சிறு குடலில் நுண்ணுாட்ட சத்துக்கள் ரத்தத்தில் கலக்க உதவும் மெல்லிய துளைகளை அடைத்துக் கொள்ளும்.- யாமினி கண்ணப்பன்,ஊட்டச்சத்து நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்