உள்ளூர் செய்திகள்

தலைவலியை போக்கும் சாது பந்த சர்வாங்காசனா!

'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி, நரம்புகளில் ஏற்படும் கோளாறு; ஒரு பக்கம் மட்டுமே வரும் வலியின் தன்மை, நபருக்கு நபர் மாறுபடும்; தலைவலி வந்து விட்டால், சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்று, பாதிக்கப்பட்டவர்களை கேட்டால் தெரியும். தலைவலியால் அவதிப்படுபவர்களை பார்த்தால், 'எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது' என்று நினைக்கும் அளவிற்கு இருக்கும்.வலி இருக்கும் நேரத்தில் சத்தமும், வெளிச்சமும் வலியை மேலும் அதிகப்படுத்துவதோடு, குமட்டல், தலை சுற்றல் இருக்கும்.

தீர்வு

மைக்ரேன் தலைவலிக்கு வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தத்தை கையாளும் வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே தீர்வு. மருந்துகளால் எந்த பலனும் கிடையாது; நீண்ட நாட்களாக வலி நிவாரணிகளை உட்கொள்வதால், பக்க விளைவுகளின் பாதிப்புகள் இருக்கும்.மைக்ரேன் பிரச்னைக்கு யோகாசனம் மிகச் சிறந்த தீர்வாக இருப்பது, சர்வதேச அளவில் செய்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள 'பலாசனா, சாது பந்த சர்வாங்காசனா, அதோ முக ஸ்வானாசனா' ஆகிய மூன்று பிரத்யேக ஆசனங்களை, பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரிடம் முறையாக கற்று தொடர்ந்து செய்வதில், சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.இந்த ஆசனங்களை, வாரத்திற்கு ஐந்து நாட்கள், தினமும் 30 நிமிடங்கள் செய்தால், படிப்படியாக வலியின் தீவிரம், தன்மை குறைந்து, வாரத்திற்கு இரண்டு நாட்கள் வருவது, ஒரு நாள், அதன்பின், மாதம் ஒரு நாள் என்று எண்ணிக்கை குறைவது தெரிய வந்துள்ளது. இந்த ஆசனங்கள், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதற்றத்தைக் குறைத்து, மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.- info@jindalnaturecare.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !