சோடியத்தை கட்டுக்குள் வைக்கும் பொட்டாசியம்
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. யோகா, இயற்கை மருத்துவம்உடல், மன ரீதியில் அறிகுறிகளை் காட்டாமல், அவசர நிலைக்கு தள்ளுவது உயர் ரத்த அழுத்தத்தின் இயல்பு. முறையான உணவுப் பழக்கம்,யோகா, தியானம் இவற்றை தினசரி ஒழுங்காக கடைப்பிடிப்பதால், மருந்தே இல்லாமல், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். சில வாரங்களுக்கு மட்டும் இவற்றை கடைப்பிடிப்பதால் பலன் இருக்காது. தியானம், மூச்சு பயிற்சி, மியூசிக் தெரபி, அப்யங்கம், நீராவி, வாழை இலை குளியல், மண் குளியல் சிகிச்சைகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.உணவுகள்உப்பின் அளவை குறைக்க வேண்டும். அந்த காலத்தில் பல நாட்கள் பயணம் செய்யும் போது, தற்போது உள்ளது போல சுலபமாக உணவு கிடைக்காது. அதனால், பல நாட்கள் உணவு கெடாமல் இருப்பதற்கு பயணங்களின் போது, உப்பு சேர்த்தார்கள். தற்போது, சமைக்க சோம்பேறித்தனம், நேரமின்மை என்று பல காரணங்களால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். பல மாதங்கள் வரை கெடாமல் வைப்பதற்கு உப்பு, வேதிப் பொருட்களை அதிகம் சேர்க்கின்றனர். பொட்டாசியம்உணவில் பொட்டாசியம் நிறைந்து இருக்க வேண்டும். இது சோடியத்தின் அளவை கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும்.பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள் அதிகமாக சாப்பிடும் போது, அதிகமான பொட்டாசியம் கிடைக்கும். தர்ப்பூசணி, கிர்ணி, வாழைப்பழம், அவகாடோ, ஆரஞ்சு இவற்றில் அதிகமான பொட்டாசியம் உள்ளது. பால் பொருட்கள், பச்சை கீரைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு, நட்ஸ், விதைகள், தக்காளி, பீன்ஸ் வகைள் இவைகளில் பொட்டாசியத்துடன் கால்சியம் உள்ளது.தினக்கூலி செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், காபி, டீ அதிகம் குடிப்பர். இது, உடலில் நீர் சத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோய் வரும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.தினமும் நான்கு பல் பூண்டு சாப்பிடுவதால், அதில் உள்ள 'அலிசின்' என்ற வேதிப் பொருள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, அடைப்பை நீக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், வயிற்றில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே பூண்டை பச்சையாக சாப்பிட்டால், அதன் காரம், அமிலத்தை அதிகரிக்கும்.பொடிசாக நறுக்கி இட்லி, தோசை மாவில், சட்னியில் துாவலாம். செம்பருத்தி இதழ், கேரட், பீட்ரூட் இவற்றில் லைக்கோபின் அதிகம்; இதயத்திற்கு நல்லது. மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள மாதுளை சாறு, ரத்தக் குழாயை தளர்வடைய செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். டாக்டர் ஒய். தீபா,இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை