உள்ளூர் செய்திகள்

"மலையேறும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதேன்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனது மகன் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறான். அவன் ஓடும்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?விளையாடும்போது நம் சுவாச குழாயின் வெப்பநிலை குறைகிறது. இதனால் சுவாச குழாய் சுருங்கி இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மூச்சுத் திணறலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு, சுவாசக்குழாய் அதிகளவில் சுருங்குகிறது. அதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதை எக்சர்சைஸ் இண்ட்யூஸ்டு ஆஸ்துமா என்பர்.குழந்தைகளுக்கும் இதே காரணத்தால்தான் விளையாடிவிட்டு, வரும்போது இருமல் உண்டாகிறது. இதுபோன்ற காரணங்களால் குழந்தைகளின் விளையாட்டை, ஒருபோதும் நிறுத்தக் கூடாது. விளையாட்டு பயிற்சிகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதிலும் நீச்சல் பயிற்சி ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த பயிற்சியாகும்.விளையாடும்போது ஏற்படும் மூச்சுத் திணறலை தவிர்க்க, விளையாடத் துவங்கும்போது அரைமணி நேரத்திற்கு முன்பே, இன்ஹேலர்ஸ் பயன்படுத்துவது நல்லது. இதனால் விளையாட்டினால் ஏற்படும் உங்கள் மகனின் மூச்சுத் திணறலை எளிதில் தவிர்க்கலாம்.எனக்கு ஒரு மாதமாக இருமல் இருந்தது. டி.பி., நோய் கிருமி உள்ளதா என கண்டறிய என் மருத்துவர் Ig G, Ig M என்ற ரத்தப்பரிசோதனைகள் செய்யும்படி கூறினார். அப்படியென்றால் என்ன?இப்பரிசோதனைகளை ஆன்டிபாடீஸ் என்பர். டி.பி., கிருமியை ஆன்டிஜென் என்பர். டி.பி., கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் மேற்கண்டவை உருவாக்கப்படுகிறது. வெளிநாடுகளில் டி.பி., நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவு. அதனால் மேற்கண்ட ஆன்டிபாடீஸ் உடலில் உள்ளதை வைத்து, டி.பி., நோயை கண்டறிகின்றனர். ஆனால் நம் நாட்டில் 40 சதவீதம் பேருக்கு டி.பி., கிருமியால் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. மீதமுள்ள 36 சதவீதம் மக்களுக்கு டி.பி., நோய் கிருமி உடலில் இருந்தாலும் நோய் ஏற்படுவது இல்லை. அவர்களுக்கு வைத்தியமும் தேவையில்லை. மேலும் இந்த 36 சதவீத மக்களுக்கும் மேற்கண்ட ஆன்டிபாடீஸ், பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கும்.எனவே மேற்கண்ட பரிசோதனையின் மூலம் உங்கள் உடலில் உள்ள டி.பி., நோயை கண்டறிய முடியாது.எனது மகனுக்கு 20 வயது. நாங்கள் பலமுறை ஊட்டி, கொடைக்கானல் சென்றுள்ளோம். கடந்த முறை ஊட்டி சென்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது ஏன்?ஒரு சிலருக்கு மலைப் பகுதிகளில் வேகமாக ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களது நுரையீரலில் அதிகளவில் நீர் நின்று விடுகிறது. இதை 'ஹை ஆல்டிடியூட் பல்மோனரி ஓடெமா' என்பர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகநேரம் மலைப்பகுதியில் இருப்பது நல்லதல்ல. உடனடியாக மலையைவிட்டு இறங்கி சமவெளிக்கு செல்வதே நல்லது. ஒருமுறை இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் திரும்ப, திரும்ப மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் மகன் வரும் காலங்களில் மலைப்பகுதியை தவிர்ப்பது நல்லது.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்