கனவு தவிர்... நிஜமாய் நில்! குடலை சுத்தம் செய்யும் வழி!
சிறு வயதிலேயே அதிகமாக இறைச்சி உண்ணும் பெண்கள், மிகவும் சிறிய வயதில், 10 வயதிற்கு கீழ், பருவமடைவதுடன், மாதவிடாய் கோளாறுகளும் வருகின்றன. இறைச்சியில், உள்ள, 'டை எத்தில் ஸ்டில்போஸ்டிரோல்' என்ற கெடுதலான பொருளே, இதற்கு காரணம். வியாபார நோக்கில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளுக்கு அதிக உடல் எடைக்காக, இதை பயன்படுத்துகின்றனர்.'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனப்படும், நீர்க் கட்டிகள், குழந்தையின்மை போன்றவற்றிற்கு, இந்த வேதிப் பொருளே காரணம். தினமும், இறைச்சி சாப்பிடும் பெண்களுக்கு, சைவ உணவு சாப்பிடும் பெண்களைக் காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக மார்பகப் புற்றுநோய் வருகிறது. தாவர உணவில் உள்ள நார்ச்சத்தானது, குடலை நன்கு சுத்தம் செய்து வைக்கிறது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள மாமிச உணவோ, குடலின் இயக்கத்தை குறைத்து ஜீரண சக்தியை குறைப்பதுடன், மலச்சிக்கலை ஏற்படுத்தி, குடல் புற்று நோய்க்கு வழி செய்கிறது.அமெரிக்காவின், 'வேக் ஸ்டேட்' பல்கலைக் கழக மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சியில், மூட்டு வலி உள்ளவர்களுக்கு, மாமிச உணவைத் தவிர்த்து, தாவர உணவு கொடுத்த போது, மூட்டு வலியும், வீக்கமும் குறைந்ததுடன், நோயும் மறைந்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தினமும், இறைச்சி உணவு உண்பவர்களுக்கு, ரத்தக் கொதிப்பு ஏற்படும் வாய்ப்பு, மற்றவர்களை விடவும், எட்டு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொழுப்பு அதிகம் உள்ளதால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, 50 வயதிற்கு மேல், 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனப்படும், எலும்புகள் தேய்மானம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு, தினமும் நடை பயிற்சி செய்ய வேண்டும். கால்ஷியம் மற்றும் மக்னீஷியம் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். தேவைப்பட்டால், 'ஈஸ்ட்ரோஜன்' மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப, உடல் எடையை, சீராக வைத்திருக்க வேண்டும். உடலில், ஆண்டிற்கு ஒருமுறை, 'மாஸ்டர் ஹெல்த் செக் -அப்' செய்தால், உடல் பிரச்னைகளை, ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து சரி செய்வது எளிது.ரத்தக் கொதிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், அவற்றால் ஏதும் தொந்தரவு இல்லாவிட்டாலும், அலட்சியம் செய்யாமல், உணவு முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது முக்கியம். இதனால் இதய நோய், 'ஸ்ட் ரோக்' வராமல் தடுக்கலாம்.டாக்டர் கீதா சுப்ரமணியன்பொது மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர், சென்னை.myheartcares@hotmail.com