உள்ளூர் செய்திகள்

உடல் எடையை சீராக்கும் சிறு தானியங்கள்!

இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பும் நம் நாட்டில், உடல் பருமனோடு இருந்தவர்கள் இருந்தனர். ஆனால், தற்போது இருப்பதை போன்று, உடல் பருமன் பெரிய அளவில் பிரச்னையாக அப்போது இல்லை. எப்போது நம் உணவில் அரிசி பிரதான இடம் பிடித்ததோ, அப்போதே பிரச்னையும் ஆரம்பித்து விட்டது.கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, குதிரைவாலி, சாமை என்று தாங்கள் விளைவிக்கும் சிறு தானியங்கள், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள் மட்டுமே பிரதான உணவாக இருந்தன.சிற்றுண்டிகள் செய்வதானாலும், சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்கள் செய்வதானாலும் பெரும்பாலும் சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைக் கொண்டு வீட்டிலேயே செய்து சாப்பிட்டனர்.நாள் முழுக்க வயலில் உழைத்தால் எவ்வளவு கலோரி சாப்பிட வேண்டுமோ, அதை விட குறைவாகவே சாப்பிட்டனர். போதுமான அளவு உணவு சாப்பிடாததால், ஊட்டச்சத்து குறைபாடு பெருமளவில் இருந்ததே தவிர, உடல் பருமன் ஏற்படவில்லை.அதிலும், கார்போஹைட்ரேட், மாவுச்சத்து பிரதானமாக உள்ள உணவுகளையே அதிகம் சாப்பிட்டு, அத்தியாவசிய நுண்ணுாட்டச் சத்துக்கள் கிடைக்காமல் கொழுப்பு அதிமாகி, பல உடல் கோளாறுகள் வந்து விட்டன.குறிப்பிட்ட உணவை சாப்பிடும் போது, எவ்வளவு நேரத்திற்குள் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்தே, அந்த உணவின், 'கிளைசிமிக் இண்டெக்ஸ்' கணக்கிடப்படும்.இனிப்பு வகைகள், மைதா, வெள்ளை சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டால், உடனடியாக ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.அரிசி, கோதுமையை ஒப்பிடும் போது, சிறு தானியங்களில் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. மிகவும் நிதானமாகவே ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.பழக்கம்வெளிநாடுகளுக்கு சென்றால், பழகிய உணவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் நாட்டு உணவை சாப்பிட்டு பழகிக் கொள்வதைப் போன்று, தேவை வந்தால் பழகிக் கொள்வோம். ஆனால் அதை விடவும், 2 வயதிற்குள் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் குழந்தைக்கு கொடுத்து பழக்கி விட்டால், அதன்பின், வேறு எந்த உணவும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.டாக்டர் சி.ஜெகதீஷ்,மூத்த மருத்துவ ஆலோசகர்,இன்டேர்னல் மெடிசின்,அப்போலோ மருத்துவமனை, சென்னை044 - 2829 0200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !