முக பருக்களை போக்கும் நீராவி குளியல்!
ஒரு நபர் அமரும் வகையில் இருக்கும் மர அறையில். அமரும் முன், முழு உடல் மசாஜ் செய்து அமர வேண்டும். குளிர்ந்த நீரில் நனைத்த ஈரத் துணியை தலையில் போட வேண்டும். மரப்பெட்டியின் உள்ளே செலுத்தப்படும் ஆவியில், 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். இது தான் நீராவிக் குளியல். உடல் முழுக்க வியர்க்கும்.; தேவையில்லாத கழிவுகள் வியர்வைவோடு வெளியேறும். பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற நார்ச்சத்தே இல்லாத துரித உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, கழிவுகள் முறையாக வெளியேறாமல் உடலில் தங்கி விடும். இதனால், பல உடல் பிரச்னைகள் ஏற்படலாம்.இவர்களுக்கு நீராவி குளியல் நல்ல பலனை தரும். இது தவிர, தோல் நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை எடுத்துக் கொண்டு இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பட்சத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நீராவி குளியலோடு, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்.இதய கோளாறு உள்ளவர்கள் நீராவி குளியல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல் நன்கு வியர்த்து கழிவு வெளியேற்றத்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.முகப்பருக்கள் மறையும். மேலும் பலவித உடல் பாதிப்பை தடுக்கலாம். முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கலாம். நீராவி குளியல் பற்றி நிறைய அறிவியல் ஆராய்ச்சியும் இருக்கிறது. நீராவி குளியல் எடுத்த பின், பழச்சாறு குடிக்க வேண்டும், ஒரு மணி நேரத்திற்கு பின், எளிதில் செரிமானம் ஆகக் கூடிய எண்ணெய், மசாலா, காரம் இல்லாத ஆவியில் வேக வைத்த உணவாக சாப்பிடலாம். டாக்டர் பி.ராகுல்,இயற்கை மற்றும் யோகா மருத்துவர்,சஞ்சீவினி லைப்ஸ்டைல் கிளினிக், விழுப்புரம்90252 26497, 94870 38838.drrahulnaturo@gmail.com