உள்ளூர் செய்திகள்

"ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்தலாமா?

பி.முத்துவீரன், மதுரை: என் வயது 71; ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக, 'நெபிவோலால்' என்ற மருந்தை, மூன்று ஆண்டுகளாக எடுத்து வருகிறேன். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மருந்தை தொடர்ந்து எடுக்கலாமா?'நெபிவோலால்' என்பது, 'பீட்டா பிளாக்கர்' என்ற மருந்து வகையை சேர்ந்த, ரத்தக் கொதிப்புக்கான மருந்து. இது, ரத்த அழுத்தத்திற்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் மிக நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது; பக்கவிளைவுகளும் குறைவு. எனவே, இம்மருந்தை நீங்கள் தாராளமாக தொடரலாம்.எம். பார்த்திபன், ராமேஸ்வரம்: எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாகிறது. தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். தற்போது, 'செக்கப்' செய்ததில், எல்.டி.எல்., அளவு, 60 மி.கி., என வந்துள்ளது. கொலஸ்ட்ரால் மாத்திரையை நிறுத்தி விடலாமா?எல்.டி.எல்., என்பது, நம் ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்ட கொழுப்பு. மாரடைப்பு வராமல் தடுக்க, எல்.டி.எல்., அளவு, 100 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். மாரடைப்பு வந்தவருக்கு மீண்டும் வராமல் இருக்க, எல்.டி.எல்., அளவு, 70 மி.கி., கீழ் இருக்க வேண்டும். உங்கள் எல்.டி.எல்., அளவு, 60 மி.கி., என்பது, சரியாகவே உள்ளது. நீங்கள், ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்தவே கூடாது. இப்போது எடுக்கும் அளவிலேயே, தொடர்ந்து எடுக்க வேண்டும்.ஆர். சந்தோஷம், தேனி: எனக்கு, மூன்று ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக, இருவகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்த அழுத்த மருந்துகளை எப்போது நிறுத்தலாம்?ரத்த நாளங்களில் இருக்கும் ரத்தஅழுத்தம், 140/90 என்ற அளவிற்கு மேல் இருந்தால், அதை உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். இது உடல் உள்ளுறுப்புகளை, குறிப்பாக மூளை, இதயம், கண் மற்றும் ரத்தநாளம் போன்றவற்றை பாதிப்படைய செய்யும். இதற்கு, வாழ்வியல் முறை மாற்றம் அவசியம். அத்துடன், மருந்து, மாத்திரை பலருக்கு தேவைப்படும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், வீரியம் குறைந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அதை, உங்கள் டாக்டரே நிர்ணயம் செய்ய முடியும். எனவே, உங்கள் டாக்டரிடம் சென்று, ரத்த அழுத்த மாத்திரையை குறைப்பதா, நிறுத்துவதா என, ஆலோசனை பெற்று செயல்படவும். நீங்களாகவே நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது.டாக்டர் விவேக்போஸ்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்