ஆற்றலை செலுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சை
வலி இல்லாமல், குறைந்த ரத்த இழப்புடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இவற்றின் வெளிப்பாடு தான், கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நுண்துளை வழியாக செய்யப்படும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை. இதைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக லேசர் அறுவை சிகிச்சையும் பரவலாக செய்யப்படுகிறது.லேசர் என்பது சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களை ஆற்றலாக மாற்றி, தேவையான இடங்களில் செலுத்தி செய்யப்படும் சிகிச்சை முறை. இந்த ஒளிக்கதிர்களை செலுத்தும் போது வெளிப்படும் ஆற்றல், தசைகளை வெட்டுவதற்கு, சுருக்குவதற்கு, பாதிக்கப்பட்ட தசைகளை அழிப்பதற்கு, ஓட்டையை அடைப்பதற்கு பயன்படுகிறது.என்ன பலன்?பொதுவாக திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யும் போது, மயக்கம் தெளிந்ததும் வலி அதிகமாக இருக்கும்; ரத்த இழப்பு ஏற்படும். இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது சில வாரங்கள் ஆகலாம். லேப்ராஸ்கோபி சிகிச்சையிலும் கூட சிறிய துளை போடுவோம்.ஆனால், ஒளி ஆற்றலை செலுத்தி செய்யப்படும் லேசர் முறையில் இது எதுவும் இருக்காது. கட்டி இருக்கும் இடத்தில் லேசரை செலுத்தினால், கட்டி பொசுங்கி விடும். தோலின் மேற்புறத்தில் எந்த சுவடும் தெரியாது. இந்த முறையில் சிறிய கட்டிகள், தோல் பிரச்னைகள், மூலம், பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகளை சரி செய்வது என்று பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எங்கள் மையத்தில் திறந்தநிலை உட்பட வேறு முறைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளிலும் ரத்தம் உறையும் தன்மை அதிகமுள்ள, சிக்கலான நரம்புகள் உள்ள இடங்களில் லேசரை உபயோகிக்கிறோம். 'டே கேர்' முறையில் சிகிச்சை தரப்படுகிறது.டாக்டர் ஆர்.சபரீசன், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர், பீ வெல் மருத்துவமனை, சென்னை86983 00300www.drsabarisan.in