உள்ளூர் செய்திகள்

கோடையில் இனிப்பு சாப்பிடலாம்

மழைக்காலம் துவங்கிவிட்ட தால், குளிர் ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால், கடந்த பல மாதங்களாக இருந்த உஷ்ணம் இன்னும் தணியவில்லை. இப்படி உஷ்ணம், குளிர் மாறி மாறி இருப்பத்தை 'கிரீஸ்மசரியா' என்று ஆயுர்வேதம் சொல்கிறது. இந்த சீதோஷ்ணம் பல உடல் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.அதிகமான உஷ்ணம் பூமியில் இருக்கும் நீர்நிலைகளை வறட்சி அடையச் செய்வது போன்று, நம் உடம்பையும் வறட்சியாக்கும். இதனால், நீர்ச்சத்து குறைந்து வாதம் தொடர்பான பிரச்னைகள் அதிகமாகும். கபம் குறையும்.நம்முடைய செரிமான சக்தியும் குறைவாகவே இருக்கும். அதனால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங் காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதிக வெப்பம் உடலின் சக்தியை குறைத்து விடும். எனவே, இளநீர், மாதுளை சாறு குடிக்கலாம். தாமரை, வெட்டி வேர், சந்தனம், ரோஜா இதழ் கள் சேர்த்த நீர் பருகலாம். மற்ற காலங்களைவிட உஷ்ணம் அதிக மாக இருக்கும் போது, இனிப்பு சுவை கூடுதலாக சாப்பிடலாம்.உஷ்ணம் குறையாமல் இருப்பதால், அக்னி, வாயுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால்தான் காற்று வறட்சியாக உள்ளது; உடல்பலம் குறைகின்றது. முழுமையாக குளிர் வரும் வரை மிதமான அளவில் உடற்பயிற்சி செய்தால் போதும்.வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டுக்காய்ச்சி, ஆறவைத்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தொற்று பரவல் குறையும்.வெயில் காலத்தில் மட்டும் மதியம் அரை மணி நேரம் தூங்க லாம். முடிந்தவரை இரவு நேரத்தில் மொட்டை மாடியில் இயற்கை காற்றில் இருப்பது நல்லது.டாக்டர் தீபா ஜெயராம்.ஆயுர்வேத மருத்துவர், பிரணவம் ஆயுர்வேத சிகிச்சாலயா, சென்னை044 42146525, 98413 73458deepa_jram@yahoo.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்