உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்பது என்ன?ஆட்டோ இம்யூன் பாதிப்பால், நம்முடைய நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டுப் பகுதியில் உள்ள செல்களை அழிப்பது, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். இந்நோய் வருவதற்கான காரணம்?குறிப்பாக புகைப்பழக்கம், வாயிலிருக்கும் சில வகை பாக்டீரியா, வைரஸ் தொற்று, மரபியல் காரணங்கள் போன்றவை.ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிசின் அறிகுறிகள் என்ன?துாங்கி எழுந்ததும் மூட்டுகளில் இறுக்கம், வலி இருக்கும். அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்ததும் வலிகள் குறைந்த உணர்வு ஏற்படும்.இதன் பாதிப்புகள் என்ன?இணைப்பு எலும்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும். கண்கள், நுரையீரல், ரத்தக்குழாய் பாதிக்கும். சிறுநீரகம், இதய பாதிப்பு கூட ஏற்படும்.மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளதா?நோய் எதிர்ப்பு செல்கள் ஏற்படுத்தும் பிரச்னையால், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து, மாரடைப்பு வர காரணமாகிறது. பரிசோதனைகள் என்ன?ஈ.எஸ்.ஆர்., - சி.ஆர்.பி., போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். ஆர்.எப்., ஆன்ட்டி சி.சி.பி., என்பது இதற்கென்றே உள்ள பிரத்யேக பரிசோதனை முறைகள். என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?இரண்டு வகை சிகிச்சைகள் உள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்க, வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்கப்படும். குறைந்த அளவு ஸ்டிராய்டு மருந்துகள், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த மருந்துகள், நோயாளிக்கு பயன்தர, மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும். இப்பிரச்னைக்கு நிரந்தர சிகிச்சைகள் ஏதும் கிடையாது. வலி நிவாரணிகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ரத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து அறிய பரிசோதனைகள் அவசியம். தேவையான மருத்துவ கண்காணிப்பு இருந்தால், பக்க விளைவுகள் குறித்து பயப்படத் தேவை இல்லை.இந்நோயை குணப்படுத்த முடியுமா?கட்டுப்படுத்தலாம்; குணப்படுத்த முடியாது. வாழ் நாள் முழுதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை செய்தால், குணமடைய வாய்ப்புண்டு.புதிய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளதா?புதிய மருந்து தற்போது உள்ளது. வழக்கமான சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால், இந்த மருந்து கொடுக்கலாம். இதன் விலை சற்று கூடுதல் மட்டுமல்லாமல், வீரியம் மிக்கது.எஸ்.ஷ்யாம் ரூமட்டாலஜிஸ்ட்.96001 90790


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்