உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1 மூளை உறை என்பது என்ன?மூளையில் மூன்று விதமான உறைகள் உள்ளன. ஒன்று, 'டியூரா மேட்டர்' என்பது மூளையின் வெளிப்பகுதியில் இருக்கும் வெளியுறை. 'அரக்கனாய்டு' மேட்டர் என்பது நடுப்பக்கம் இருக்கும் இரண்டாவது உறை. 'பயோ மேட்டர்' என்பது மூளையோடு இணைந்திருக்கும் மூன்றாவது உறை. இவை மூளைக்கு கவசம் போல் இருந்து காக்கின்றன; மூளையில் ஏற்படும் அதிர்வுகளை தடுக்கும் வேலையை செய்கின்றன.2மூளை உறைகளில் காய்ச்சல் ஏற்படுமா?மூளை உறைகளை, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் பாதிக்கும் போது, வீக்கம் மற்றும் காய்ச்சல் எற்படுகின்றன. இதுவே மூளை உறை காய்ச்சல் எனப்படும். 'மெனிஞ்சஸ்' என்றால், மூளை உறை என, அர்த்தம். 3 மூளை உறை பாதிப்பால் என்ன நோய்கள் வரும்?ஹீமோபைலஸ், இன்புளூயன்ஸா - டைப் பி, நீமோ காக்கல், மம்ஸ்' எனும் பாக்டீரியா கிருமிகள், மூளை உறைகளை தாக்கும்போது, உண்டாகும் தொற்றுக்கு, மெனிஞ்சைடிடிஸ், நோய் என்று பெயர். 4 நோயின் அறிகுறிகள்?திடீரென்று கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத அளவுக்கு தலைவலி, பின் கழுத்து தசை பிடிப்பு, நினைவு தப்புதல், கண் கூச்சம், வெளிச்சத்தை பார்க்க முடியாது. அடிக்கடி குமட்டல், அளவில்லாமல் வாந்தி ஏற்படும். அடிக்கடி வாந்தி வரும் உணர்வு இருக்கும். குழந்தைகள் என்றால் தூங்கிக் கொண்டே இருப்பர். யாரையும் அடையாளம் காண முடியாத நிலை, மன எரிச்சலோடு இருப்பர்.5 'மெனிஞ்சைடிடிஸ்' நோய், மூளை உறைகளை மட்டும் பாதிக்குமா?இந்த நோய் மூளை உறைகளை மட்டுமின்றி, மூளை தண்டுவடத்தையும் பாதிக்கிறது. அதனால் தண்டுவட சவ்வு வீங்கி, கழுத்து தசைகள் கல் போன்று இறுகிப் போகும். கழுத்து வலி வந்து, கழுத்தை அசைக்கவோ, திருப்பவோ முடியாது. 6 மூளை உறை காய்ச்சல் நோய், என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?இந்த கிருமிகள், சுவாச உறுப்புகள் வழியாக, ரத்தத்துக்கு சென்று, அங்கே இனப்பெருக்கம் அடைந்து, உடல் முழுவதும் பரவுகின்றன. இவை ரத்தத்தை நஞ்சாக்கி, மூளைக்கு சென்று, மூளை உறைகளை பாதிக்கும். நுரையீரல் திசுக்கள், எலும்பு மூட்டுகள், இதயத் தசைகள் என, பல உறுப்புகளையும் பாதிக்கும். மேலும் காது கேளாமை, வலிப்பு நோய், நினைவு திறன் குறைதல் போன்றவற்றை ஏற்படுத்தும்.7 இந்த நோய்க்கு தடுப்பூசிகள் உள்ளனவா?மூளை உறை காய்ச்சலைத் தடுக்க, தடுப்பூசிகள் உள்ளன. 'ஹீமோபைலஸ், இன்புளூயன்ஸா' தடுப்பூசி மற்றும் 'நீமோ காக்கல், மம்ஸ்' போன்றவை உள்ளன. இவற்றை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை போட்டுக் கொள்ளலாம். 8 யார் இந்த தடுப்பூசி போட்டு கொள்ளலாம்?சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டுக் கொள்ளலாம். 50 வயது வரை போடலாம். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு அடிக்கடி செல்வோர், ரத்த பரிசோதனை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிவோர் போன்றோர், இந்த தடுப்பூசிகளை போட்டு கொள்வது நல்லது.9 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?கட்டாயம், இரண்டு வயது முடிந்த உடன் போட்டு கொள்ளலாம். இந்த மூளை உறை காய்ச்சல் குழந்தைகளையே அதிகம் தாக்கும் என்பதால், குழந்தைகளுக்கு கட்டாயம் இந்நோய்க்கான தடுப்பூசிகளை போடலாம்.10 தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் உண்டா?கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இல்லை. தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், வலி தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சல் வரலாம்.- ராஜேந்திரன், பொதுநலம் மற்றும் நீரிழிவு நிபுணர்.சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.எம்., நிறுவனம், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்