உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

'ரிக்கட்ஸ்' என்றால் என்ன?எலும்புகள் வளர்ச்சி குன்றி வலுவிழந்து, வளைந்து இருப்பதற்கு, 'ரிக்கட்ஸ்' என்று பெயர்.ரிக்கட்ஸ் வரக் காரணம் என்ன?'வைட்டமின் டி' குறைபாடு தான் பிரதான காரணம். இது தவிர, கால்சியம் குறைபாடு, சிறுநீரகம், கல்லீரல், உணவுக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலும் ரிக்கட்ஸ் வரலாம்.எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் தானே முக்கியம்?நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களை உறிஞ்சுவதற்கு, வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி குறைபாடு இருந்தால், வைட்டமின் 'டி'யின் ஆதாரமான, 'கால்சிட்டால் ஹார்மோன்' போதுமான அளவு உற்பத்தி ஆகாது. இதனால், போதுமான அளவு கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போய்விடும்.ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்?இரும்பு மற்றும் புரதச் சத்து குறைபாடு, கை, கால் முட்டி தடித்து இருப்பது, கை, கால் வளைந்து இருப்பது, நெஞ்சு எலும்பு முன்னோக்கி துருத்தி இருப்பது, கூன் விழுந்த முதுகு இதன் அறிகுறிகள்.மரபியல் காரணமாக ரிக்கட்ஸ் ஏற்படுமா?மரபியல் காரணங்கள் இதில் மிக அரிது.எலும்பு வளர்ச்சி தவிர, வைட்டமின் 'டி'யின் வேறு பயன்கள் என்ன?உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றலும் வைட்டமின் 'டி'க்கு உண்டு. எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. தசைகளின் நெகிழ்வு தன்மையை தடுக்கிறது. சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் டி போதுமான அளவு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?காலை நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், உடலின் சருமப் பகுதியில் படும்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, வைட்டமின் 'டி'யை உடல் உற்பத்தி செய்து கொள்ளும்.எந்தெந்த உணவுகளில் வைட்டமின் டி சத்து உள்ளது?பால், மீன், முட்டை, மாமிசம், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளில் உள்ளது.ரிக்கட்ஸ் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, இயற்கையான முறையில் கிடைப்பதற்கான மிகச் சிறந்த வழி சூரிய ஒளி. சருமத்தில் வெயில் படும் வகையில் தினமும் காலையில், 20 நிமிடங்கள் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். காலை அல்லது மாலை நேரத்து வெயிலில் குழந்தைகள் விளையாடினால், தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும்.சிகிச்சை முறைகள் என்ன?பொதுவாக கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் ரிக்கட்ஸ் வருகிறது என்பதால், வைட்டமின் மாத்திரைகள், இணை உணவுகள் மூலமே சிகிச்சை தரப்படுகிறது. வேறு காரணங்கள் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும்.- ஆர்.சங்கர்குழந்தைகள் நல எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்,அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை,கிரீம்ஸ் ரோடு, சென்னை.99625 82525


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்