உள்ளூர் செய்திகள்

கற்பக மூலிகை வெற்றிலை!

வாயை, சிவக்க வைக்க கூடியது மட்டுமல்ல, வெற்றிலை. பல நோய்களை தீர்க்கும் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. வெற்றிலையில், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளன. கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற வேதிக் பொருட்கள், வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி, உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மைகொண்ட கற்பக மூலிகை என்று கூட சொல்லாம். இதனால் தான், திருமணம் உட்பட அனைத்து விசேஷங்களுக்கும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.வாயுவை வெளியேற்றக் கூடியது. நுண்கிருமிகளை போக்கி, நோய்கள் வராமல் தடுக்கும். இரண்டு வெற்றிலையில், ஐந்து மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்க வேண்டும். இதேபோல், இரண்டு மாதங்கள் வரை செய்து வந்தால், உடல் எடை குறையும்.சளிக்கு எதிரி: இரண்டு ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும். பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தி, அதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும்போது, நெஞ்சக சளி கரைந்து வெளியேறும்.பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும். இதை பத்தாக போட்டுவர, கீழ்வாதம் குணமாகும். குழந்தைகளுக்கு சளி அதிகமானால், இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும். அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையை லேசாக நெருப்பில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து, 10 மாத குழந்தைக்கு, 10 துளிகள் வீதம், காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும்.அஜீரணத்தை போக்கும்: அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து, மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால், வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்தி வர நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட, நல்ல பலன் தரும்.அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட, வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். குழந்தைகளுக்கு, மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை, ஆமணக்கு எண்ணையில் தேய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். கம்மாறு வெற்றிலைச் சாறு, 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்று வலி குணமாகும்.கட்டிகள் குணமாகும்: தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கு, வெற்றிலை சாற்றை மூக்கில் விட குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டி களின் மேல் வைத்துக் கட்டி வர கட்டிகள் உடைந்து, சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி, வெற்றிலைச்சாறு தேன் கலந்து சாப்பிட, நாளடைவில் ஆஸ்துமா குணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்