துளி அதிகரிப்பதும் பிரச்னை தான்!
வெள்ளைச் சர்க்கரை, மைதாவை தவிர்த்து, அதற்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை, வெல்லம் இவற்றை அளவோடு உபயோகிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதுபோன்றே, அளவுக்கு அதிகமாக அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதும், தைராய்டு பிரச்னைக்கு வழி செய்யும்.நாம் பயன்படுத்தும் பற்பசைகளில் புளூரைடு, தண்ணீரில் குளோரின் உள்ளது. மைதா போன்றவற்றை புரோமின் வாயு செலுத்தி சுத்திகரிக்கின்றனர். அயோடின் மிக முக்கியம் என்று தான், அயோடின் கலந்த உப்பை தினசரி பயன்படுத்துகிறோம்.குளோரின், புரோமின், புளூரைடு இந்த மூன்றும் அயோடின் மூலக்கூறு அமைப்பைப் போன்றே இருக்கும். இதனால், நம் உடம்பு இதையும் அயோடின் என்றே நினைத்துக் கொள்ளும். இப்படி அளவுக்கு அதிகமான அயோடின் உடலில் சேர்வதாலும் தைராய்டு பிரச்னைகள் வருகின்றன என்பதற்கு ஆதாரமாக பல ஆய்வுகள் உள்ளன. துளி பற்பொடிகள் பயன்படுத்துவதால் என்ன பிரச்னை என்று நினைக்கலாம். தைராய்டு பிரச்னைக்கும் துளி அளவுதானே ஹார்மோன் உபயோகிக்கிறோம்; பலன் இருக்கிறது தானே. அது போன்று துளி அதிகமானாலும் பிரச்னை தான். புளூரைடு இல்லாத பற்பொடிகள், அதிக குளோரின் இல்லாத தண்ணீர் பயன்படுத்துவது நல்லது. அயோடின் கலந்த உப்பை தினமும் பயன்படுத்துவது தேவையற்றது. ஒரு காலத்தில் நம் நாட்டில் அதிக அளவில் அயோடின் குறைபாடு இருந்தது. இதை நீக்க அயோடின் உப்பு தரப்பட்டது. அயோடின் கலந்த உப்பு கட்டாயம் என்று அரசு சொன்னாலும், ஓரளவிற்கு மேல் அயோடின் தேவையில்லை என்பதால், தினசரி அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. சில நாட்களுக்கு அயோடின் கலந்த உப்பு, அடுத்த சில தினங்களுக்கு சாதாரண உப்பு என்று மாற்றி, மாற்றி பயன்படுத்துவது தான் நல்லது. இதை அரசும் ஆலோசிக்க வேண்டும்.டாக்டர் சுதீர் ஐயப்பன்,டாக்டர் மீரா சுதீர்,ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை. 99623 50351, 86101 77899