உள்ளூர் செய்திகள்

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு

பித்தப்பை கற்கள் : கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை தான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாக தேவையான பித்தநீரை சேமித்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. சிறுநீரக கற்களுக்கு அடுத்தபடியாக அதிக பேருக்கு தொல்லை கொடுப்பது பித்தப்பை கல்தான்.என்னென்ன அறிகுறிகள் : இப்பாதிப்புக்கு ஆளானோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின் சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி (தொப்புளுக்கு மேல்) தோன்றுவது ஒரு வகை. இந்த வலி கடுமையாகி பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலதுப்புற விலா எலும்புகளை சுற்றி வந்து, முதுகுப்புறம் சென்று, தோள்பட்டை வரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும். முக்கியமாக கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய் பண்டங்களை சாப்பிட்டதும் இவ்வலி ஏற்படும்.காரணம் என்ன: கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைசல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. பித்தக் கற்களை கொலஸ்ட்ரால், நிறக்கற்கள் என்று வகைப்படுத்தலாம். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது நிறக்கற்கள் உருவாகின்றது. ரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகும்.தீர்வு இதோ: பித்தப்பையில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் ஓமியோபதி மருத்துவ முறையில் அகற்றலாம். 6 மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளியேறி விடும்.-டாக்டர் மதுமிதா ஓமியோபதி சிறப்பு நிபுணர்89392 66767


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !