முறுக்கு சாப்பிட்டதால் பிரச்னை!
பற்களை எடுத்த பின், அதன் எதிரே உள்ள பற்கள் மெதுவாக கீழே இறங்கும். இதை தடுப்பதே, சரியான வழி. அதற்கு பல் எடுத்த ஒரு ஆண்டுக்குள், எடுத்த இடத்தில், பல் கட்டிவிட வேண்டும். அப்படி இல்லையென்றாலும், கீழே இறங்கி உள்ள பற்களை, சில சிகிச்சை முறைகள் மூலம் சரிசெய்யலாம்நான் முறுக்கு சாப்பிட்டபோது ஈறுகளில் குத்தி, சின்ன கட்டி ஏற்பட்டு, வலி உள்ளது. இது ஏன்?முறுக்கு, சிப்ஸ், முருங்கைத் தோல் போன்ற உணவு வகைகளை சாப்பிடும்போது, கவனமாக இருக்க வேண்டும். இதில் உள்ள சில கூர்மையான பாகங்கள், நம்மையும் அறியாமல், ஈறுகளில் குத்தும். இதனால் ஈறுகளில், சிறிய கட்டி போன்று உருவாகும். இக்கட்டிக்கு, 'ஜின்ஜைவல் ஆப்சஸ்' என்று பெயர். இதில் எரிச்சலும், வலியும் ஏற்படும். இதைக் கண்டு பயப்பட வேண்டாம். சில நாட்களில், தானாக சரியாகும். எரிச்சல் அதிகமிருந்தால், பல் டாக்டர் ஆலோசனையுடன், களிம்பு தேய்க்கலாம். எரிச்சல் நன்கு குறையும்.ஒரு வாரத்திற்கு மேல், ஆறாமல் இருந்தாலோ, வலி அதிகமானாலோ, உடனடியாக டாக்டரிடம் பரிசோதனை செய்யவும். இவ்வகை கட்டிகளில், வலி வரும் வரை, பலர் இதை கவனிக்கத் தவறி விடுவர். இதனாலேயே, இக்கட்டிகள் பெரிதாகி, பல் பிரச்னைகளை உண்டாக்குகின்றன.ஈறில் இக்கிருமிகள் இருக்கும் போது, அதை மட்டும் சுத்தம் செய்து, ஒரு வாரம் வரை மாத்திரை சாப்பிட்டால் போதும். ஆனால், கவனிக்காமல் விட்டு விட்டால், இவை பற்களின் வேர் வரை சென்று, சீழ் பிடித்து விடும். அந்நேரங்களில், பற்களின் வேர் வரை சுத்தம் செய்து, மருந்து வைத்துக் கட்ட வேண்டும். அடிக்கடி இது போன்ற கட்டி வந்தால், உடலில் வைட்டமின் சக்தி அல்லது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என, அர்த்தம். ஆரோக்கியமான உணவு முறை, உடலுடன் சேர்த்து பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்கும்.கீழ் கடவாய் பற்கள் சிலவற்றை, சொத்தை காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் எடுத்து விட்டேன். இப்போது, மேல்பற்கள் கீழே இறங்கி உள்ளன. எடுத்த பற்களை இப்போது கட்டமுடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?பற்கள் ஒரே இடத்தில் இருப்பது, பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிகிறது. ஆனால், பல விசைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் தான், பற்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. நாக்கு, கன்னம், உதடு, பக்கத்து பற்கள், எதிரே உள்ள பற்கள் என, பல திசைகளில் இருந்து, இந்த விசைகள் பற்களின் மேல் அழுத்தம் கொடுத்து, அவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றன.இதில், ஏதாவது ஒன்று மாறும் போதோ, குறையும்போதோ பற்கள் நகரத் துவங்கும். பற்களை எடுத்த பின், அதன் எதிரே உள்ள பற்கள் மெதுவாக கீழே இறங்கும். இதை தடுப்பதே, சரியான வழி. அதற்கு பல் எடுத்த ஒரு ஆண்டுக்குள், எடுத்த இடத்தில், பல் கட்டிவிட வேண்டும். அப்படி இல்லையென்றாலும், கீழே இறங்கி உள்ள பற்களை, சில சிகிச்சை முறைகள் மூலம் சரிசெய்யலாம்.வேர் சிகிச்சை செய்து, 'கேப்' போடுவது அல்லது பற்களில் கம்பி போட்டு, அவற்றை உரிய இடத்திற்கு நகர்த்தலாம். அதே நேரம், பல் எடுத்த இடத்தில், பற்களை கட்டி விட வேண்டும். சில நேரங்களில், ஈறு நோய் காரணமாகக் கூட, பற்கள் கீழே இறங்கியது போலத் தெரியும். அப்படியானால், ஈறு நோயை சரி செய்து, பற்களை பழைய நிலைக்கு கொண்டு வந்து பின், 'சப்ளின்டிங்' என்னும் முறையில், அதே இடத்தில் நிலையாக வைக்க வேண்டும். விழுந்த அல்லது எடுத்த பற்களை, உரிய நேரத்தில் கட்டுவது பின்னாளில் பல பிரச்னைகளை தவிர்க்கும்.டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,மதுரை. 94441-54551