நாங்க இப்படிதானுங்க! எதிர்மறை எலும்புகளே எனக்கு கிடையாது!
அந்தக் காலத்தில், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கும் வழிகள் எனக்கு தெரியாது. மெலிய வேண்டும் என்றால், பட்டினி கிடப்பேன். பல மாதங்கள் வெறும் ஏலக்காய் போட்ட பால், பாப்கார்ன் சாப்பிட்டு, பசியோடு இருந்திருக்கிறேன். பட்டினி கிடந்து மெலிவது, எவ்வளவு தவறான வழி என்பது இப்போது புரிகிறது.வளர வளர, வாழ்க்கை நமக்கு எல்லா அனுபவங்களையும் தரும். நல்லது, கெட்டது, அசிங்கம்... எல்லாவற்றில் இருந்தும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வேன். என் சக்தி முழுவதும், நேர்மறை விஷயங்களில் மட்டுமே இருக்கும்; எதிர்மறை எலும்புகள் என் உடம்பில் இல்லை; எதையும் கசப்பானதாக நினைப்பதே இல்லை. யாரும், எதுவும் எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை; ஒவ்வொரு விஷயத்திலும், கவனமாக இருந்து, என்னை மாற்றிக் கொண்டதுமில்லை. ஆனால், என்னை சுற்றி நடப்பனவற்றை உன்னிப்பாக கவனிப்பேன். நல்ல விஷயம் எங்கிருந்து, யாரிடம் இருந்து வந்தாலும், எனக்கு பிடித்தால், அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன். இதுதான், எனக்கே தெரியாமல், 63 ஆண்டுகளாக என்னை உயிர்ப்போடும், அழகோடும் வைத்திருக்கிறது.பானு ரேகா கணேசன், பாலிவுட் நடிகை.