நாங்க இப்படிதானுங்க!: அழுத்தம் தராதவர் அப்பா!
என் படங்களைப் பார்த்தால், மம்மூட்டி மகன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்பாவை போல இருக்க வேண்டும்; நடிக்க வேண்டும்; எந்த வயதிலும் இளமையாக தோன்ற வேண்டும் என்றெல்லாம், எப்போதும் நினைத்ததே இல்லை. காரணம், அப்பா தான். வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும்; நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும்; இதைச் செய்யணும், அதைச் செய்யணும் என்று, இதுவரையிலும் என் மீது எந்த அழுத்தத்தையும் அவர் திணித்ததேயில்லை.'நான் எப்போதும் எதைச் செய்தாலும், 'பெஸ்ட்' ஆக செய்வேன்; நீயும், என்ன செய்ய விரும்புகிறாயோ, அதை சிறப்பாக செய்ய வேண்டும். அவ்வளவு தான்' என்று சொல்லுவார். அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது இது தான்!நடிப்பு என்று இல்லை, எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும்; தனித் திறமையுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த அழுத்தத்தை எனக்கு நானே போட்டுக் கொண்டேன்.துல்கர் சல்மான், நடிகர்