உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! கோஹ்லிக்கு பிடித்த பட்டர் சிக்கன்!

மைதானத்தில், விராட் கோஹ்லியை பார்க்கும்போது, அனைவருக்கும் ஏற்படும் வியப்பு, வேகம், சுறுசுறுப்பு, இரண்டோடும் சேர்த்து, எப்படி இவர் உடம்பு மட்டும், ரப்பர் போல வளைகிறது என்று தான். 'பிட்னஸ்'சைப் பராமரிக்க, புது தொழில்நுட்பத்தையும், நவீன கருவிகளையும் பயன்படுத்துகிறார் விராட். நுரையீரலுக்கு, அதிக வேலை கொடுக்கும், 'மாஸ்க்'குடன், 'வொர்க் - அவுட்' செய்யும் போது, நுரையீரலின் திறன் அதிகரிப்பதாகக் கூறுகிறார். விளையாடும் போது, காயங்கள், தசைப் பிடிப்பு, வராமல் பார்த்துக் கொள்ளும் ஒரே ஆட்டக்காரர், விராட் தான்.'டயட்' விஷயத்திலும் ரொம்ப கட்டுப்பாடு. 'பட்டர் சிக்கன்' ரொம்ப பிடிக்கும்; அதற்காக, அளவே இல்லாமல் சாப்பிட மாட்டார். 'கலோரி' சற்று கூடுதலாக சாப்பிட்டு விட்டோம் என, தோன்றினால், பயிற்சி மூலம் சரி செய்து விடுவார். இரவு உணவு ரொம்ப, 'லைட்' ஆகவே சாப்பிடுவார். 'மேட்ச்' இருக்கும் நாட்களில், இடைவேளையில், புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த, 'ஸ்நாக்ஸ்' இவரின் விருப்பம்.உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, நிறைய மினரல் வாட்டர் குடிப்பார். எந்த சூழலிலும், 'ஜங்க் புட்' சாப்பிடவே மாட்டார். 'வெயிட் லிப்டிங், கார்டியோ எக்சர்சைஸ்' இரண்டும் தான், விராட்டின் பேவரைட். இந்த இரண்டையும் பிரத்யேகமாகச் செய்யும் போது, நல்ல, 'பிட்னஸ்'சுடன் இருப்பதாக சொல்கிறார்.வாரத்திற்கு ஐந்து நாட்கள் வொர்க் - அவுட். இரண்டு நாட்கள் ஓய்வு, இதுதான் விராட் 'பார்முலா!' ஓய்வில் இருக்கும் நேரத்தில் தான், சிதைந்த தசைகள், 'ரிப்பேர்' செய்வதும், வளர்வதும் நடக்கும் என்று விராட் கூறுவது, அறிவியல் பூர்வ உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !