நாங்க இப்படிதானுங்க!: ஒரு கிராம் கூடாது... குறையவும் செய்யாது!
'மாடலிங்' துறையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், இந்தியாவின் நவோமி காம்பல் ஆகியிருப்பார் என, த்ரிஷா குறித்து சொல்லப்படுகிறது. இயற்கையிலேயே ஒரு நடிகைக்கான கச்சிதமான உடல் அமைப்பு இல்லாத போதும், சினிமா துறைக்கு வந்த இந்த, 17 ஆண்டுகளில், ஒரு கிராம் உடல் எடை கூடவோ, குறையவோ இல்லாமல், கச்சிதமாக இத்தனை ஆண்டுகள் இருப்பது என்பது, சாதாரண விஷயம் இல்லை. காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து, வீட்டிலேயே பிரத்யேக மாக உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி, யோகா செய்கிறார். வாரத்திற்கு நான்கைந்து நாட்கள் செய்தால் போதும் என்பதெல்லாம், த்ரிஷாவிடம் கிடையாது; தினமும் குறைந்தது, 30 நிமிடங்களாவது, 'வொர்க் அவுட்' செய்ய வேண்டும். காலை உணவாக, பரோட்டா, தயிர், ஆம்லெட் என, எப்போதும் ஹெவி தான். அது நாள் முழுவதிற்கும் தேவையான சக்தியையும், சுறுசுறுப்பை யும் தருகிறது என்பது, அவரது அனுபவம். அதன்பின், நிறைய தண்ணீர், விட்டமின், 'சி' அதிகம் உள்ள பழச்சாறு, 'ஆன்டிஆக்சிடென்ட்' நிறைந்த கிரீன் டீ, குறிப்பிட்ட இடைவெளியில் குடித்தபடி இருப்பார். காலை உணவு தவிர்த்து, மற்ற நேரங்களில் கூடுதல் கலோரி சாப்பிட்டதாக உணர்ந்தால், அடுத்த நாள் கவனமாக, அதை சமன் செய்து விடுவார்.-- த்ரிஷா கிருஷ்ணன், நடிகை, பிராணிகள் ஆர்வலர்.