உள்ளூர் செய்திகள்

வென்டிலேட்டரின் முக்கியத்துவம் என்ன?

ஆக்சிஜன் இன்றி, உடல் உறுப்புகள், ஓரிரு வினாடிகள் இயங்குவது சிரமம். அது போன்ற வேளைகளில், உயிரைக் காக்கும் ஒரு செயற்கை கருவி தான் இந்த, 'வென்டிலேட்டர்!' நுரையீரல் செய்ய வேண்டிய வேலையை, இக்கருவி செய்யும்என், 3 வயது மகன், சமீபத்தில் மண்ணெண்ணெயை குடித்து விட்டான். அவனுக்கு, 'நிமோனியா' ஏற்பட்டதால், நுரையீரல் பாதிக்கப்பட்டதாக டாக்டர் கூறினார். சாப்பிடும் உணவு வயிற்றுக்குள் செல்லும் போது, நுரையீரல் அவ்வாறு பாதிக்குமா?நாம் சாப்பிடும், எதுவும் வயிற்றுக்குத்தான் செல்லும். சாப்பிடும்போது இருமல் ஏற்பட்டால், அது மூச்சுக்குழாயின் வழியாக, நுரையீரலுக்குள் சென்று விடும். ரசாயன பொருட்களை குடிக்கும்போது, இருமல் ஏற்படும். அதனால் அப்பொருட்கள், நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன், மண்ணெண்ணெய், காற்றில் ஆவியாகும் தன்மையுடையது.அதன் மூலமும், நுரையீரலுக்குள் சென்று விடும். இப்படி பாதிப்பு ஏற்படுவதை, 'கெமிக்கல் நிமோனியா' என்பர். நம் நுரையீரலின் காற்றுப் பைக்குள், காற்று நுழைந்து, வெளியேற மட்டுமே முடியும். தண்ணீர் சென்றாலே, கடினமாகி விடும். இது போன்ற வேதியியல் பொருட்கள் என்றால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிருக்கே கூட, ஆபத்தாக முடியலாம்.சரியான சிகிச்சை, உடனடியாக செய்யப்பட வேண்டும். இது போன்ற பொருட்களை, குழந்தைகள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும்.என் நண்பர் ஒருவர், திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயக்கம்அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், 'வென்டிலேட்டர்' பொருத்த வேண்டும் என, டாக்டர்கள் கூறினர். இது அவசியம் தானா?நுரையீரலின் முக்கிய வேலை, ஆக்சிஜனை வெளிமண்டல காற்றில் இருந்து உள் எடுப்பதும், கார்பன் - டை - ஆக்சைடை வெளியேற்றுவதும் ஆகும். இவ்வேலையை, நுரையீரல் செய்யத் தவறினால், அது, உயிருக்கு ஆபத்தாக முடியும். ஆக்சிஜன் இன்றி, உடல் உறுப்புகள், ஓரிரு வினாடிகள் இயங்குவது சிரமம். அது போன்ற வேளைகளில், உயிரைக் காக்கும் ஒரு செயற்கை கருவி தான் இந்த, 'வென்டிலேட்டர்!' நுரையீரல் செய்ய வேண்டிய வேலையை, இக்கருவி செய்யும். இதில் ஏராளமான வகைகள் உள்ளன. யாருக்கு எந்த வகையான செயற்கை சுவாசம் கொடுப்பது என்பது, அவரவர் நோயின் தன்மையை பொறுத்து அமையும்.என் பாட்டிக்கு, 'தைராய்டு கேன்சர்' உள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனக் கூறிய டாக்டர், அதற்கு முன், 'பிராங்கோஸ்கோபி' செய்ய வேண்டும் என்கிறாரே, அது எதற்கு?தைராய்டில் உள்ள, கேன்சர், அதைச் சுற்றியுள்ள பிறப்பகுதிகளிலும் பரவி உள்ளதா என, கண்டறிய வேண்டும். தைராய்டு கேன்சர், மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரலுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. தைராய்டு, மூச்சுக் குழாயுடன் இணைந்திருப்பதால், 'பிராங்கோஸ்கோபி' செய்து, கேன்சர் மூச்சுக்குழாயில் பரவவில்லை என, உறுதி செய்த பின்பே, அறுவை சிகிச்சை செய்ய முடியும். மூச்சுக் குழாயில், 'கேன்சர்' இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதை உறுதி செய்வதற்குத் தான், அறுவை சிகிச்சைக்கு முன், 'பிராங்கோஸ்கோபி' செய்ய வேண்டும் என, டாக்டர் கூறியுள்ளார்.டாக்டர் எம். பழனியப்பன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்