உள்ளூர் செய்திகள்

"கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?

ஐம்பது வயதான எனக்கு மூட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓராண்டாக வலி உள்ளது. சிகிச்சை செய்தும் பலனில்லை. இதற்கு பகுதி மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறாரே, சரியா?பகுதிமூட்டு மாற்று சிகிச்சையில் மூட்டினில் தேய்மானம் அடைந்த பகுதியை மட்டும் அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப்படும். இளம்வயதில் மூட்டின் வடிவம் மாறாமல் இருந்து, இணைப்பு நார்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்போருக்கு இது நல்ல சிகிச்சை. பகுதி மூட்டு மாற்று சிகிச்சையில் வலி குறைவு. திருப்தியான செயல்பாடு, சுலபமாக குணமடைவது, குறைவான நாட்கள் மருத்துவமனையில் தங்குவது, இதன் சிறப்பு அம்சங்களாகும்.என் மகள் வயது 21. மூன்று மாதங்களாக முழங்காலில் வலி உள்ளது. 'எக்ஸ்ரே' பார்த்ததில் தொடை எலும்பின் கீழ்ப்பகுதியில் எலும்பினுள்ளே ஒரு கட்டி உள்ளதாக கூறினர். சி.டி.ஸ்கேன் பார்த்ததில் அது 'ஜெயன்ட் செல் டியூமர்' என்கின்றனர். நான் என்ன செய்வது?'ஜெயன்ட் செல் டியூமர்' என்பது எலும்பை அரிக்கும் ஒரு வகை கட்டி. நீங்கள் அந்தக் கட்டியில் உள்ள திசுவை எடுத்து பரிசோதனை செய்தபின், அதை அகற்ற வேண்டும். அகற்றியபின், எலும்பு வளரும் வரை பாதுகாப்பதற்கு ஒரு பிளேட் போட வேண்டும். சிலருக்கு பிளேட் போட இயலாவிட்டால், சிறப்பாக செய்யப்பட்ட செயற்கை மூட்டு பொருத்த வேண்டும். இதை மனதில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.என் வயது 52. சில ஆண்டுகளாக ஓயாத கை, கால் குடைச்சல் உள்ளது. காலையில் எழுந்தவுடன் உடம்பு முழுவதும் வலி, சோகை மற்றும் எலும்பை அழுத்தினாலும் வலி உண்டாகிறது. பல பரிசோதனைகள் செய்தும் காரணம் அறியவில்லை. மருத்துவர் வைட்டமின் 'டி' பற்றாக்குறை என்கிறார். என்ன செய்வது?கை, கால் குடைச்சல் என்பது மிக சகஜம். இதற்கு பல காரணங்கள் உண்டு. சிலருக்கு காரணம் கண்டறிவதும் கடினம். வைட்டமின் 'டி' பற்றாக்குறை இருந்தாலும், அவ்வாறு ஆகலாம். நீங்கள் வைட்டமின் 'டி' க்குரிய பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று மாதங்கள் அந்த சிகிச்சையை செய்தால், வைட்டமின் 'டி' பற்றாக்குறை சரியாகும்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்மதுரை. 93442-46436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்