உள்ளூர் செய்திகள்

மூட்டு வலிக்கு என்ன சாப்பிடலாம்?

விநாயகம், கோவில்பட்டி: என் வயது 46. சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி வருகிறது. காலை எழுந்தவுடன் மூட்டில் வீக்கம் உள்ளது. இரண்டு மாதங்களாக உள்ள இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனது வலியை போக்க என்ன வகை உணவு சாப்பிடலாம்?நீங்கள் கூறும் அறிகுறிகள் மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகள். மூட்டினில் உள்ள ஜவ்வு பழுதடையும்போது இந்த வலி அதிகமாகிறது. இதற்கும், உணவு வகைகளுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. இருப்பினும் காய்கறிகள், பழங்கள் நார் வகைகள் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம், மூட்டு ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு செய்வதால் மூட்டினில் உள்ள நச்சுப் பொருட்களையும் அகற்ற முடியும். மேலும் தினமும் நடைப் பயிற்சி செய்தால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !