உள்ளூர் செய்திகள்

தோள்பட்டை வலிப்பது ஏன்?

உறங்கும் போது, உங்களை அறியாமலேயே, தோள்மூட்டின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துகிறீர்கள். தசைகளை வலுப்படுத்த, தசைப்பயிற்சி செய்தால், மீண்டும் வலி வராமல் தடுக்கலாம்என் வயது 52. பல ஆண்டுகளாக, தோள்பட்டை மேலே, தலையை வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளது. இப்போது தோள்பட்டையை மேலே உயர்த்தினாலே வலிக்கிறது. தோள்பட்டையின் மேல், தலையை வைத்தால், வலி அதிகமாகிறது. இதற்கு என்ன காரணம்?தோள்மூட்டை உயர்த்த முடியவில்லை எனில், அதிலுள்ள நீர்சுரப்பியில் உள்வீக்கம் இருக்கலாம். மேலே தூக்கும் போது, நீர்சுரப்பியில் உராய்வு ஏற்படுவதால், வலி அதிகமாகும். உறங்கும் போது, உங்களை அறியாமலேயே, தோள்மூட்டின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துகிறீர்கள். தசைகளை வலுப்படுத்த, தசைப்பயிற்சி செய்தால், மீண்டும் வலி வராமல் தடுக்கலாம்.என் வயது 60. முழங்காலில் வலி அதிகமாக உள்ளது. மாடிப்படி ஏற முடியவில்லை. சம்மணமிட்டு அமர்வது கடினமாக உள்ளது. எக்ஸ்-ரே எடுத்ததில், மூட்டின் ஒரு பகுதியில் ஜவ்வு தேய்ந்திருப்பதாக, டாக்டர் தெரிவித்தார். ஒருமுறை, 'ஸ்டிராய்டு' ஊசியும் போடப்பட்டது. இரண்டு மாதங்கள் வலி குறைந்து, மீண்டும் தற்போது, வலி அதிகமாக உள்ளது நிரந்தர சிகிச்சை உள்ளதா?மூட்டின் ஒரு பகுதி தேய்மானமாக இருந்தால், பழுதடைந்த பகுதியை அகற்றி, செயற்கை மூட்டு பொருத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளது. இதனால், வலியின்றி அனைத்து வேலைகளையும் செய்யலாம். முழு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சையை விட, பகுதி மூட்டு மாற்று சிகிச்சை, பல மடங்கு நல்லது.என் வயது 38. சாலை விபத்தில் வலது முழங்கால் மூட்டில் தீவிர காயம்பட்டது. மூட்டில் நான்கு இணைப்பு நார்கள் அறுந்து, மூட்டு விலகிய நிலையில் இருந்தது. மோசமான நிலை என, டாக்டர் தெரிவித்தார். முழுமையாக சரி செய்ய முடியுமா?முழங்கால் மூட்டில், நான்கு முக்கியமான இணைப்பு நார்களுமே கிழிந்திருக்கின்றன. இரண்டுக்கு மேல் கிழிந்தாலே, மூட்டு விலகிய நிலையில் உள்ளதென பொருள். நவீன தொழில்நுட்பத்தில், ஏ.சி.எல்., பி.சி.எல்., இணைப்பு நார்களை, நுண்துளை சிகிச்சையில் சரி செய்யலாம். மற்ற நார்களை, 'மினி இன்வேசிவ் சர்ஜரி' மூலம் சரி செய்யலாம். அடிபட்ட இரண்டு வாரத்திற்குள் சரிசெய்தால், ஆறு வாரத்திற்குள் மூட்டினை, இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். நான்கு மாதங்களில், அனைத்து வேலைகளை செய்யலாம், விளையாடலாம்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !