உள்ளூர் செய்திகள்

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திட்டம்

கர்ப்பப்பை வாய் புற்று நோய், எளிதில் தடுக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும், நம் நாட்டில்் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் உயிர் இழக்கின்றனர். இதற்கு காரணமாக அதிக ஆபத்துள்ள மனித பாப்பிலோமா வைரஸ் எச்.பி.வி., உள்ளது.இந்த புற்று நோய் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாதால், கிராமப்புற பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இது தவிர, தடுப்பூசி குறித்து தவறான நம்பிக்கைகள் உள்ளதால், அதை போட்டுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். கிராமப்புறங்களில் தடுப்பூசி கிடைக்காததும், பரிசோதனைக்கு தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததும் பிரதான காரணம்.குறைந்த விலையில் தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்வதோடு, பாரம்பரிய, புதுமையான தொழில்நுட்பங்களை இணைத்து குறைந்த செலவில் பரிசோதனைகளை செய்வதால், ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து சரியான சிகிச்சையை அளிக்க முடியும். இதற்கு, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பின்தங்கிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அரசு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டால், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது சுலபம். டாக்டர் பத்மப்ரியா விவேக், இயக்குனர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், கிளெனிகல்ஸ் மருத்துவமனை, சென்னை79967 89106info.chn@gleneagleshospitals.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்