உள்ளூர் செய்திகள்

உங்கள் தலைமுடியும் ஒளிரும்!

மனிதர்களுக்கு இயல்பிலேயே தலையில் முடி வளர்வது அழகாகவும், அதுவே ஒரு அடையாளமாகவும் எப்போதும் இருக்கிறது. அதிலும், நமது இந்தியப் பெண்களுக்கு தளையத்தளைய ஆறடிக்கூந்தலே அழகு என்று மரபான பழக்கமும், அதன் மீதான ஆசையும் எப்போதும் உண்டு. ஆண்கள் சிகையை அலங்காரமாக கருகருவென்று பராமரிக்கவும், பெண்கள் ஆறடி அழகுக்கூந்தலை வளர்க்கவும் எளிய முயற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.முடி வளர்வதற்கு: கறிவேப்பிலையை நன்கு அரைத்து, அதிலே தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சியும் தலையில் தேய்த்து வர, தலைமுடி நன்கு வளரும்.முடி உதிர்வதை தடுக்க; வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதனை நீரில் நன்கு வேகவைத்து, ஒரு நாள் கழித்து அந்த வேகவைத்த நீரைக்கொண்டு தலையை நன்றாக கழுவி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், தலைமுடி கொட்டுவது அறவே நின்றுவிடும். அதே போல், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்களை பொடி செய்து, அதனை இரவில் தண்ணீரில் கலந்து, அதனை காய்ச்சவேண்டும். பின்னர் அப்படியே ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறை அதனுடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.மேலும், வெந்தயம், குன்றிமணி பொடியை கலந்து, அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, ஒருவாரத்திற்கு பின்னர் தினமும் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நிற்கும்.வழுக்கை தலையில் முடி: வழுக்கை விழுந்த தலையில் முடி வளர்வதற்கு இன்று ஏராளமான ரசாயனம் கலந்த பொடிகளை, பல்வேறு விதமான கலவைகளை தருகிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் தான் பலருக்கும் ஏற்படுகிறது. அதற்குப்பதிலாக, கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து, சிறிய துண்டாக அவற்றை நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தொடர்ந்து தடவி வந்தால், வழுக்கை மறையும்.இளநரை கருப்பாக மாற: பலருக்கும் இன்று சிறுவயதிலேயே, இளநரை, பித்தரை என்று வந்து அது மொத்த நரையாகவே தலைமுழுக்க மாறி விடுகிறது. இதனைத் தடுக்க, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால், இளநரை மீண்டும் கருமை நிறத்திற்கு மாறும். மேலும், காய்ந்த நெல்லிக்காயை பவுடராக மாற்றி, தேங்காய் எண்ணெய்யுடன் அதனைக் கலந்து, கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி, அதனை தினமும் தலையில் தேய்த்து வந்தால், முடி கருப்பாக மாறும்.தலைமுடி கருப்பாக ஒளிர: தலைமுடி கருப்பாக இருந்தாலும், சிலருக்கு öசாரöசாரப்பு தன்மையுடன் காணப்படும். கருப்பாக இருந்தாலும் தலைமுடி ஒளிரவேண்டும். அதற்கு அதிமதுரம் 20 கிராம், 50 மில்லி தண்ணீரில் அதை காய்ச்சி, ஆறிய பின்னர் அதனை பாலில் ஊறவைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒருமணிநேரம் ஊறவிட்டு, பின்னர் குளிக்க வேண்டும். இதனால், கருப்பு முடியும் ஒளிரும்.செம்பட்டை போக்க: தலைமுடி செம்பட்டையாக மாறியதை, மீண்டும் கருமை நிறத்திற்கு மாற்ற, மரிக் கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும், சம அளவில் எடுத்து, அரைத்து தலைக்கு தடவினால், செம்பட்டை நிறம் மாறும்.நரைகள் போக்க: தாமரைப்பூ கசாயம் வைத்து, காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால், நரைகள் விரைவில் மாறிவிடும். முள்ளைக்கீரையை வாரம் ஒருநாளாவது உணவில் சேர்ப்பதும் நலம் பயக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்