உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கேரளத்து சிங்கம் பழசிராஜா

கேரளத்து சிங்கம் பழசிராஜா

பந்தலுார்தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், தமிழக-கேரளா எல்லையில் உள்ளது.இங்குள்ள பல தேயிலை தோட்டங்களில் 'வெண்ட்வொர்த் எஸ்டேட்டும்' ஒன்று.எஸ்டேட்டிற்குள் உள்ள குப்பைகூளங்கள் மண்டிக்கிடந்த குழியை சீரமைத்த போது, அந்த குழிக்கு பின்னனியில் ஒரு குகை இருந்தது,ஆர்வத்துடன் அந்தக் குகையை மேலும் சரி செய்தபோது அது நீளமான பாதையைக் கொண்டிருந்தது, பாதையின் ஒரு இடத்தில் அது இரண்டாகவும் பிரிந்தது, அதற்கு மேல் போகமுடியாத அளவு பாறைகள் சரிந்து காணப்பட்டது.இது குறித்து தகவல்களை வரலாற்று பதிவுகள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட போது, இது இந்தப் பகுதியை ஆட்சி செய்த பழசிராஜாவின் குகையாக இருக்கலாம் என்று கருதினர்.யார் இந்த பழசிராஜா17 ஆம் நுாற்றாண்டில் கோட்டயத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்.இந்த கோட்டயம் மண்டலம் மொழி வாரி மாநிலம் பிரிப்பதற்கு முன் கண்ணனுார் முதல் முதுமலை வரை பரந்துவிரிந்திருந்தது.வணிகம் செய்ய வந்து ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றி, நம்மவர்களுக்கே பலவித வரிகளை விதித்த கிழக்கிந்திய கம்பெனிகளின் நடவடிக்கைளை கடுமையாக எதிர்த்தவர் மன்னர் பழசிராஜா.1793 ஆம் ஆண்டு முதல் 1805 ஆம் ஆண்டு வரை பலவிதங்களில் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டார்.இவரது ஆட்சியையும் வீரத்தையும் தன்னம்பிக்கையும் பார்த்த மக்கள் இவர் பின் ஒன்று திரண்டனர், இதன் காரணமாக இவரை எதிர்த்து வெல்வது என்பது கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் சவலாக இருந்தது.இவர் இருந்த பகுதி மலையும் மலை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள ஆதிவாசிகளின் துணையுடன் கொரில்லா போர் முறையைக் கைக்கொண்டு கம்பெனி படையை நடு நடுங்கச் செய்தார்,வில் அம்பு எய்து எதிரிகளை வீழ்த்துவதில் திறன் வாய்ந்த குரும்பா சமூகமும் கைகோர்த்தில் பழசிராஜா வெல்லமுடியாத வீரராக திகழ்ந்தார்.ஒரு கட்டத்தில் பெரும் படையுடன் இவரை எதிரிகள் முற்றுகையிட்ட போது குகைகளின் வழியாக தப்பிச் சென்று வேறு வேறு இடங்களில் இருந்து போரைத் தொடர்ந்தார் இப்படி கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்த பழசிராஜா 1805-ஆம் ஆண்டு, அய்யன்கொள்ளி காட்டில் நடந்த போரின் போது வீர மரணமடைந்தார்.பின்னாட்களில் இவர் கேரளாவின் சிங்கம் என போற்றப்பட்டார், இவரது வீரம் செறிந்த கதையை மையமாக வைத்து மம்மூட்டி கதாநாயகனாகக் கொண்டு வெளிவந்த 'கேரள வர்மா பழசி ராஜா' என்ற திரைப்படமும் அவரது புகழை மேலும் உயர்த்தியது.இந்த நிலையில் அவர் போரடியதற்கு ஆதராமான இந்தக் குகை வெளிப்பட்டதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பழசிராஜாவின் வீரத்தை பறைசாற்றும் இந்தக் குகையை பொதுமக்கள் பார்த்துச் செல்ல எஸ்டேட் நிர்வாகம் வழி அமைத்துது,பழசிராஜாவின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் கொச்சு தம்புராட்டி சுபா வர்மா, அவரது கணவர் டாக்டர் கிஷோர் ஆகியோர் நேரில் வந்து இந்த குகையினை திறந்து வைத்தனர், விழாவில் குரும்பா சமுதாயத்தை சார்ந்த கோவிந்தன்ஆசாரி, போரில் தனது தாத்தா பயன்படுத்திய வில் அம்புடன் பங்கேற்றார்,பழசிராஜாவின் சிற்பத்தை உருவாக்கிய சிற்பி பினுவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.இனி இந்தப் பகுதிக்கு வரக்கூடிய (ஊட்டியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது) சுற்றுலா பயணிகள் 31 ஆண்டுகள் போராடிய பழசிராஜாவின் குகையை பார்த்து ரசிக்கலாம்.-எல்.முருகராஜ்தகவல்,படங்கள்:பந்தலுார் ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை