உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / உண்மைக்காக உயிரைக் கொடுத்த பத்திரிகையாளர்

உண்மைக்காக உயிரைக் கொடுத்த பத்திரிகையாளர்

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதயில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் நகரம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.அங்கு குண்டு வீச்சுக்கு அன்றாடம் பலர் பலியாகிவந்தாலும் அது பற்றிய படத்தை, செய்தியை அதுதரும் துயரத்தை உலகிற்கு உணர்த்தி வந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பலியானதுதான் பெரும் சோகம்.அவரது பெயர் மரியம் டக்கா,காசாவில் பிறந்து வளர்ந்தவரான அவர் தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அநீதிகள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் துயரங்களை,போரின் தாக்கங்களை குறைக்க போக்க துயர்துடைக்க ஒரு ஆயுதமாக பத்திரிகை துறையைத் தேர்ந்தெடுத்தார்.அவர் நினைத்தபடியே போர் தரும் அவலத்தை உலகிற்கு சர்வதேச ஊடகங்கள் மூலம் உரத்துச் சொன்னார்.குண்டு மழைக்கு நடுவே பேனாவும்,கேமராவுமாக பயணித்தவருக்கு அப்போதே தெரிந்துவிட்டது தானும் ஒரு நாள் இந்த குண்டுவீச்சிற்கு பலியாவோம் என்று,ஆகவே தனது 12 வயதான ஒரே மகனை பாதுகாப்பான இடத்திற்கு படிக்க அனுப்பிவிட்டு தனது ஊடக கடமையை செய்து வந்தார்.அவ்வப்போது மகனிடம் பேசும் போது நீ தேடும் போது நான் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நான் சொன்ன உண்மைகள் என் ரூபத்தில் உன்னை வலம்வரும் என்று சொல்லியிருக்கிறார்.மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற சர்வதேச போர் நடைமுறை ஒப்பந்தங்களை கடைபிடிப்பார்கள் என்று கருதி மருத்துவமனை அருகே முகாம் அமைத்து பணியில் இருந்தனர்.ஆனால் அந்த நடைமுறை துாக்கிப் போட்டுவிட்டு குண்டு வீசப்பட்டதில் மரியம் டக்கா உள்ளீட்ட பலர் இறந்து போயினர்.உயிரைப் பொருட்படுத்தாமல், மக்களின் குரலாகத் இருந்த மரியம் டக்கா என்ற செய்தியாளரும் இன்று செய்தியாகிவிட்டார்.அவரது மரணம், போரில் உண்மையைச் சொல்லும் பத்திரிகையாளர்களின் ஆபத்தான நிலையை உலகிற்கு நினைவூட்டுகிறது. அவர் காட்டிய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் மறக்க முடியாதது.அவர் எழுதிய வார்த்தைகள், அனுப்பிய புகைப்படங்கள், பதிவு செய்த கதைகள் — எல்லாம் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கும்,இருகட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஆக 29, 2025 04:36

தமிழகத்தில் கருநாடகத்தில் அதே மரியமின் மதத்தினர் பெரும்பான்மை இந்துக்களை வைத்து செய்யும் அட்ரோசிடிக்கல் காசாவில் நடக்கும் நிகழ்வை போலவே இருக்கின்றதே அதனை எழுதும் ஊடகவியலாளர்கள் வ்வளவு பெயர் உள்ளனர் முருகராஜ் அவர்களே


Padmasridharan
ஆக 26, 2025 05:43

உயிரைக் கொடுத்தால்தான் உண்மைகள் மதிக்கப்படுகின்றன சாமி. ஏன் உயிரோடு இருக்கும்போது அநீதிகளை தட்டிக் கேட்பவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் மிரட்டி வாயை மூடச் சொல்கிறார்கள். பல இடங்களிலும் காவலர்கள் பலரும் செய்த கொடுமைகள் மறைந்துள்ளது, நடைப்பிணமாக மக்கள் உள்ளனர். ஒரு உயிர் போனாத்தானே உண்மைகள் வெளிவருகின்றன. இதில் குற்றங்களை எதிர்த்து கொடுக்கும் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல சாமானிய மக்களும் அடங்குவர். உண்மையான தைரியத்தை அடக்குவதே ஆணவமுள்ள அதிகாரிகள்தான்: இங்கு ராணுவம், எங்கும் காவலர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை