உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / செஸ் வீரன் சிறுவன் சலீமின் கனவு நனவாக

செஸ் வீரன் சிறுவன் சலீமின் கனவு நனவாக

ராணிப்பேட்டையில் உள்ளது அந்த சின்ன வீடுஅந்த வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பரிசுக் கோப்பைகள்அத்தனை கோப்பையையும் வாங்கியவன் ஒரு பத்து வயது சிறுவன்பெயர் முகம்மது சலீம்ராணிப்பேட்டையில் உள்ள பால்சம் அகாடமியில் 5-ம் வகுப்பு படிக்கும் சலீம் ஒரு நாள் தெருவில் குழந்தைகள் செஸ் விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டு நாமும் இது போல விளையாட வேண்டும் என்று நினைத்தான்.ஆர்வமுடன் நண்பர்களுடன் பள்ளியில் என்று எப்போதும் செஸ் விளையாட ஆரம்பித்தான் அந்த ஆர்வம் வெற்றியைக் குவித்தது பள்ளி அளவில் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் அவன் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளி நிர்வாகம் அவனை ஊக்குவித்தது.மாவட்ட- மாநில அளவுகளில் பல முறை முதலிடம் பிடித்த வீரனாக மாற்றியுள்ளது.இந்த வயது சிறுவர்கள் மொபைல் போனில் முழ்கிக்கிடக்கும் போது சலீமோ செஸ் விளயைாட்டில் சாதனைச் சிறுவனாகியுள்ளான்.அவனது அடுத்த கனவு இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும்அவனது கோச் தினகரன் கூறுகையில்,“சலீமின் திறமை அபரிமிதமானது சரியான சூழல் கிடைத்தால், இந்தியாவுக்காக உலக மேடையில் விளையாடும் வீரன் அவன்.”என்றார்.ஒரு பயிற்சியாளரின் பாராட்டு மட்டும் அல்ல இது—ஒரு குழந்தையின் வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின் குரல்.ஆனால் சலீமின் தந்தை கமருதீனின் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்திச் செல்பவர்.அவரால் சலீமை பெரியளவில் பயிற்சிக்கு அனுப்பவும் ,செஸ் விளையாடி பயிற்சி பெற ஒரு லேப்டாப் எனப்படும் மடிக்கணனியும் வாங்கவும் இன்னும் சில மென்பொருள் வாங்கித்தரவும் வசதியில்லை.அவனுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொடுப்பதற்கு அல்லது வழிகாட்ட உங்களில் ஒருவருக்கு தெரியும் என்றால் கிழே உள்ள போன் எண்ணை தொடர்பு கொள்ளவும்.கமருதீன் (முகமது சலீம்)அலைபேசி: 8608901045-எல்.முருகராஜ்தகவல்,படங்கள் உதவி: ஈரநெஞ்சம் மகேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி