உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / விரல்கள் பிரிந்தது, மகிழ்ச்சி பிறந்தது..

விரல்கள் பிரிந்தது, மகிழ்ச்சி பிறந்தது..

அபூர்வமான அறுவை சிகிச்சைகள் என்றால் அதை அமெரிக்காவில்தான் செய்யவார்கள் என்றோ, செய்யவேண்டும் என்றோ அவசியமில்லை, நமது மருத்துவர்களுக்கும் அது சாத்தியமே என்பதை துாத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்க்கு மூன்று குழந்தைகள், இரண்டாவது பெண் குழந்தை ஸ்ரீஷாவுக்கு பிறந்ததில் இருந்து நடுவிரலும் மோதிரவிரலும் ஒட்டியே காணப்பட்டது. இதனால் குழந்தை ஸ்ரீஷா சாப்பிடவும்,எழுதவும்,விளையாடவும் முடியாமல் சிரமப்பட்டாள்.குழந்தை வளர வளர பிரச்னையும் வலியும் அதிகமானது.பொருளாதார வசதியற்ற சுரேஷ் தனது மகளை துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தார், அப்போது குழந்தைக்கு வயது ஐந்து.அரசு மருத்துவர்கள் ராஜ்குமார்,அருணாதேவி,பிரபாகர்,ராஜா ஆகியோர் கொண்ட குழு குழந்தையின் விரல் தன்மையை நன்கு ஆராய்ந்துவிட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.,அதன்படி அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.ஆனாலும் ஸ்ரீஷா மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக எப்போது எழுதி,சாப்பிட்டு,விளையாடி மகிழ்கிறாளோ அப்போதுதான் தங்கள் சிகிச்சையை வெற்றி என்று சொல்லமுடியும் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து இரண்டு வருடமாக காத்திருந்தனர்.தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சையும் பயிற்சியும் தந்து கண்காணித்து வந்தனர். எல்லோருடைய முயற்சியும் பிரரர்த்தனையும் பலன்தர, இப்போது ஸ்ரீஷா இயல்பான குழந்தைகயாகிவிட்டாள்.நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தங்களது சிகிச்சை எந்த அளவிற்கு வெற்றிகரமாக பலனளித்தது என்பதைக் காட்டும் விதத்தில் ஸ்ரீஷாவிற்கு பிஸ்கட் தர அதை அவள் அழகாக பிரித்து ஒவ்வொன்றாக சந்தோஷமாக சாப்பிட, பார்த்தவர்களுக்கு மனம் இனித்தது.அரசு மருத்துவமனையின் புகழை உயர்த்திய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bahurudeen Ali Ahamed
மே 29, 2024 15:18

மருத்துவர்களுக்கு மனம்கனிந்த பாராட்டுக்கள். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு மருத்துவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல நல்ல மனிதநேயம் கொண்டவர்கள்


Kalyanaraman
மே 15, 2024 09:42

மருத்துவர் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்


Lion Drsekar
மே 14, 2024 15:34

பாராட்டுக்கள், இந்த செய்தி தமிழக மக்களுக்கு மட்டும் இல்லை உலக மக்களுக்கும் ஒரு ஒளிவிளக்காக அமைந்து விட்டது நம் மக்கள் குறிப்பாக மக்கள் வரிப்பணத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் பதவிக்கு வந்தவுடன் வெளிநாட்டுக்கு சிகிச்சை செய்துகொள்வதுதான் மரபு ஆனால் வெளிநாட்டில் இருக்கும் மருத்துவர்களும் நம் நாட்டுக்கு வந்து மருத்துவம் செய்துகொள்வது என்பது நடைமுறையில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது அதில் ஒன்றுதான் இந்த குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை இந்த செய்தியைப் அடிக்கும்போதே நம் குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு நிவாரணம் கிடைத்தது போல் இருந்தது திரு முருகராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள், வெளிநாட்டுக்குச் என்று சிகிச்சை செய்துகொள்பவர்கள் அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும், ஒரு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற சில எறங்களில் பல மாதங்கள் கூட காத்திருக்கவேண்டும், ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை எந்த நேரத்திலும் , எந்த சிகிச்சையும் பெற்றுக்கொள்ளலாம், பல இடங்களில் இலவசமாகவும் வந்தே மாதரம்


VIJAYALAKSHMI SOUNDARARAJ
மே 07, 2024 13:13

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்


DARMHAR/ D.M.Reddy
மே 06, 2024 00:48

இப்படிப்பட்ட மருத்துவர்களை அரசும் பாராட்ட வேண்டும்


ajar
மே 05, 2024 14:04

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை