189 நாட்கள் - 14 சிகரங்கள்!
நேபாளத்தைச் சேர்ந்தவர், நிர்மல் புர்ஜா என்ற முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ வீரர். 189 நாட்களில் 14 சிகரங்களைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார். கடந்த வாரத்தில் 14வது சிகரமான சிஷாபங்மாவை அடைந்தவுடன் 'என் லட்சியத்தை அடைந்துவிட்டேன்' என்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் நிர்மல். இமயத்தின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட உயரமுள்ள எல்லா சிகரங்களிலும் ஏறியவரான நிர்மல், இதற்காகவே தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.