உள்ளூர் செய்திகள்

ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக் கோள்கள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது, 'சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்'. இதிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதற்கு முன் 2008ஆம் ஆண்டு, முதல் முறையாக ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்த இஸ்ரோ, இப்போது தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த 20 செயற்கைக் கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக் கோள்களும் அடங்கும். இந்த 20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !