உள்ளூர் செய்திகள்

உணவில் வித்தியாசம் தேவை!

இன்றைய சூழலில் பள்ளி செல்லும் மாணவர்களில் பலரும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். மருத்துவர்கள் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என்கின்றனர். இன்றைய மாணவர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வு உள்ளதா என்பதை அறியவே, தினமும் காலை உணவு உண்கிறீர்களா? இல்லையெனில், மாற்று யோசனை என்ன? எனக்கேட்டிருந்தோம். சென்னை, மண்ணிவாக்கம், ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்.இரா. தனுஜா ஸ்ரீ, 9ஆம் வகுப்புநான் தினமும் காலை உணவு சாப்பிடுவேன். இதுக்குப் பின்னாடி ஓர் அனுபவம் இருக்கு. என் அக்கா, சரியா சாப்பிடமாட்டாங்க. அதனால அடிக்கடி மயங்கி விழுவதும், வகுப்பில் பாடங்களைக் கவனிக்க முடியாமல் போறதும், கோபப்படுவதுமாக இருந்தாங்க. அவங்க மிஸ் சொல்லி, தினமும் சாப்பிடத் தொடங்கியதும் தேவையில்லாத இந்தப் பழக்கமெல்லாம் காணாமல் போயிடுச்சு. அதுல இருந்து நானும் சரியாக சாப்பிடுறேன். டிபனுக்கு பதிலா ஜூஸ் குடிக்கிறமாதிரி ஏதாவது கொடுக்கலாம்.இரா. தனுகா ஸ்ரீ, 9ஆம் வகுப்புஎன்னுடைய அக்கா ஒருத்தங்க எப்பவுமே காலை உணவு சாப்பிடமாட்டாங்க. வெளியில வந்து ஜங்க் புட்ஸ் சாப்பிடுவாங்க. திடீர்னு ஒரு நாள் அவங்களுக்கு அல்சர் வந்துடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் ஜங்க்புட்ஸும், காலையில் சாப்பிடாததும்தான்னு டாக்டர் சொன்னாங்க. பயந்துபோன நான் இப்ப எல்லாம் காலையில் முழுச் சாப்பாடே சாப்பிட்டு விடுறேன்.சு. இலக்கிய ராணி, 9ஆம் வகுப்புநான் எட்டாவது படிக்கும் போது, எங்க வீட்டில் அடிக்கடி, ராகி, சாமைன்னு சமைப்பாங்க. எனக்கு அவை பிடிக்காது. அதனால் ஒருநாள் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்துட்டேன். முதல் நாள் இரவும் சரியா சாப்பிடவில்லை. பள்ளியில் பிரேயர் நடக்கும்போது மயங்கி விழுந்துட்டேன். அப்புறமா, எங்க டீச்சர் எல்லாம் காரணம் கேட்டு, காலை உணவை மிஸ் பண்ணாம சாப்பிடணும்னு அட்வைஸ் சொன்னாங்க. அதன் பின்னர் இப்பவரைக்கும் ஒழுங்காக சாப்பிடுகிறேன்.ச.அரவிந்த், 8ஆம் வகுப்புஎங்க வீட்டில் தினமும் இட்லி, தோசை தான் காலையில செய்வாங்க. போர் அடிப்பதால் சில நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். டீச்சர் அட்வைஸ் செய்யுறதால இப்ப சாப்பிடுறேன். ஆனாலும் பலரும் சாப்பிடாமல் இருக்க மெனுவும் ஒரு காரணம். காலை டிபனை இன்னும் வித்தியாசமான பலகாரங்களாக மாற்றினால் சாப்பிட ஆர்வம் வரும்.ம.அ.இமயன், 8ஆம் வகுப்புபள்ளிக்கு வரும்போது சாப்பிட்டு விடுவேன். சாப்பிடாம மயங்கி விழுறவங்களைப் பார்த்திருக்கேன். பள்ளி லீவு அன்னிக்கு மட்டும் சாப்பிடமாட்டேன். இல்லாட்டி லேட்டா எழுந்து சாப்பிடுவேன். காலை உணவை இட்லி, தோசையில இருந்து கண்டிப்பாக மாற்றணும். கூழ், கஞ்சி மாதிரி ஏதாவது கொடுத்தால் சட்டுன்னு குடிச்சிடலாம்.மு. சந்தோஷ், 8ஆம் வகுப்புகாலையில எழுந்திருக்க லேட் ஆகிடுச்சுன்னா, ஸ்கூல் வேன் வருவதற்குள்ளாக சாப்பிட முடியுறதில்லை. அன்றைய நாட்களில் பட்டினிதான். அப்படியான நாளில் மூன்றாவது பீரீயட்டில் பசி வந்துடும். அதையும் தாங்கிட்டுத்தான் வகுப்பை கவனிச்சுட்டு இருந்தேன். எங்க மிஸ்தான் ஒருநாள் காலை உணவின் அவசியம் பற்றிச் சொன்னாங்க. அதன் பின்னர் இப்போ ஒழுங்காக சாப்பிடுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !