உள்ளூர் செய்திகள்

மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்

கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் அறிமுகமான செய்தி வாசிப்பாளரைக் கண்டு மக்கள் வியந்துபோனார்கள். காரணம், இந்தச் செய்தி வாசிப்பாளர் உண்மையானவர் அல்ல. மெய்நிகர் ரோபோ. மனிதர்களைப் போன்றே இமைகளைச் சிமிட்டும், புன்னகைக்கும்! இதன் குரல், மனிதக்குரல் போன்று இருக்காது. கணினி பேசுவது போன்று இருக்கும். சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்குவா, தேடு பொறியான சோகௌவுடன் (sogou) இணைந்து, இதை உருவாக்கியுள்ளது. மெய்நிகர் என்பது, உண்மை போலவே இருக்கும் காட்சி. வெறும் பிம்பம். இதைத் தொட்டுப்பார்த்து உணர முடியாது. இச்செய்தி வாசிப்பாளரால், 24 மணிநேரமும் வேலை செய்ய முடியும். கணினியில் செய்திகளை தட்டச்சு செய்துவிட்டால், மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் அதை வாசித்துவிடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !