புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கூறுங்கள்.1) சுவிட்சர்லாந்து நாட்டின் பெரும் பகுதி மலைகளால் நிறைந்துள்ளது. _________2) ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடு கிரேக்கம். _________3) சிங்கங்கள் மழைக்காடுகளில் வாழும். _________4) தைவான் ஒரு தீவு நாடு. _________5) உலகின் மிகப் பெரிய டெல்டா கங்கா - பிரம்மபுத்ரா டெல்டா. _________விடைகள்:1. மெய். சுவிட்சர்லாந்தின் 60 சதவீத பரப்பளவு ஆல்ப்ஸ் மலைகளால் நிறைந்துள்ளது.2. பொய். வாடிகன் சிட்டி 0.44 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்டது. இதுவே ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடு.3. பொய். பொதுவாக சிங்கங்கள் புல்வெளிகளில் தான் வாழும். 4. மெய். இது பசிபிக் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது.5. மெய். இது சுந்தரவன டெல்டா என்றும் அழைக்கப்படுகிறது.