உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த சாக் ஷி!

ரியோ மல்யுத்தப் போட்டியின் 'பிரீஸ்டைல்' 58 கிலோ எடைப் பிரிவின் 'ரெபிசேஜ்' வாய்ப்பில் அசத்தினார் இந்தியாவின் சாக் ஷி மாலிக். முதலில் மங்கோலியாவின் புரேவ்டோர்ஜினை சாய்த்தார். பின் வெண்கலத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தானின் ஐஸ்சுலுவை 8 - 5 என வென்றார். இதன் மூலம், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தார். ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !