உள்ளூர் செய்திகள்

ஆர்க்டிக் கடற்பகுதியில் ஒலி இடம் பெயரும் உயிரினங்கள்

ஆர்க்டிக் கடல் பகுதியில், மர்மமான ஒலி எழும்புகிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அந்த பகுதியை விட்டு, வெளியேறி வருகின்றன. கனடாவில் உள்ள நுனாவுட் மாகாணத்தில், ஃபூயிரி மற்றும் ஹெக்லா ஜலசந்தி உள்ளது. அது, கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ள பகுதி. இங்கு, கடந்த சில மாதங்களாக, வினோத ரீங்கார ஒலி எழுகிறது. இதனால், பெரிய வாய் உள்ள திமிங்கலம், நீர் நாய் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.கடலில் வேட்டையாடுவதைத் தடுக்க, சில சுற்றுச்சூழல் அமைப்புகளே, ஒலி எழுப்பும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளதாக, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு ராணுவ விமானங்கள், அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. எனினும், அந்த ஒலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !