அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில், இந்த ஆண்டு, 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கடும் கோடை காலம், மே 4ல் துவங்கி மே 28 வரை இருக்கும். ஏற்கெனவே, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கோடையின் தாக்கத்தால், வெப்ப நிலை 40 44 டிகிரி செல்சியஸ் வரை சென்று விட்டது. இந்த நிலையில், 'தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.