உள்ளூர் செய்திகள்

நம்மைச் சுற்றி: அம்பை மரச் சொப்புகள்!

இந்தச் சொப்பு சாமான்கள் மரத்தால் தயாரிக்கப்படுபவை. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கைவினைக் கலைஞர்கள் 18ஆம் நூற்றாண்டில் இருந்து தயாரிக்கிறார்கள். இவை, கண்கவரும் அழகிய இயற்கை வண்ணங்கள், நச்சு இல்லாத உட்பொருட்களை வைத்துத் தயாரிக்கப்படுபவை. இவற்றை மறுசுழற்சி செய்யலாம். தாழம்பூ இலைகள், பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவை நச்சுகள் கலக்காத பொம்மைகளாகின்றன. சொப்பு சாமான்களுடன் குழந்தைகள் விளையாடும்போது, அவற்றைத் தவறுதலாக அவர்கள் கடித்துவிட்டாலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் என்கின்றனர் இவற்றைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்கள். இப்பொருட்கள் புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !